பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காயன்மார் கதை,

அவருடைய தீவிரமான பக்தியையும் இடைவிடாத உருத்திர பாராயணத்தையும் கண்டு உலகம் வியந்து பாராட்டியது. உருத்திரத்தின் ப்ொருளாக உள்ள இறை. வன் திருவுள்ளம் மகிழ்ந்து அவருக்குத் திருவருள் புரிந்து தன்னுடைய திருவடிக் கண்ணே வாழும் பேரின்ப நிலையை வழங்கின்ை.

18. திருகாளைப் போவார் நாயஞர் - சோழ நாட்டில் உள்ள பல பிரிவுகளில் மேற்கா நாடு ன்ன்பது ஒன்று. கொள்ளிடத்தின் கரையில் அந்த காட் டில் ஆதனூர் என்ற ஊர் நீர்வளமும் நிலவளமும் கிரம்பி யிருந்தன. அவ்வூரில் உள்ள மக்கள் மிக்க செல்வப் பெருக்கு உடையவர்களாக வாழ்ந்தனர். பல பெருங்குடி மக்கள் நெருங்கி வளர்ந்துவரும் வளப்பம் உடையது அது.

அவ்வூரைச் சார்ந்த புலைப்பாடியில் பஞ்சம குலத்தில் உள்ள மக்கள் உழுதல் முதலிய தம் கடமைகளேச் செவ்வி தாகச் செய்து தமக்குரிய உரிமைகளைப் பெற்று மனைவி. மக்களோடு இன்புற்று வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் கந்தனர் என்பவர் ஒருவர். அவர் பிறந்து உணர்வு வந்தது முதலே சிவபெருமானிடம் இடையீடு இல்லாத அன்பு உடையவராக இருந்தார். வேறு கினேவின்றி எப்போதும் இறைவன் திருவருளேயே சார்பாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். - -

தமக்குப் பரம்பரையாக விட்டிருந்த சுதந்தரமாகிய கிலத்தைத் தம்முடைய வாழ்க்கைக்கு உரிய துணையாகக் கொண்டு தாம் செய்ய வேண்டிய தொழில்களேச் செய்து அறம் திறம்பாத நெறியில் கின்ருர் நந்தனர். பறைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/90&oldid=585584" இலிருந்து மீள்விக்கப்பட்டது