பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனர் 想博派

குலத்தினருக்குரிய தொழில்களில் வல்லவராகிய அவர்தம் செயல்களிலும் சிவபெருமான் திருத்தொண்டையே செய்து, வந்தார். தோல், நரம்பு முதலியவற்றை மக்களின் உப

யோகத்துக்கு மற்றவர்கள் கொடுத்து அதல்ை வரும் ஊதி

யத்தைப் பெற்று வாழ்ந்தார்கள். நந்தனரோ சிவபெரு, மானுடைய கோயில்களில் உள்ள பேரிகை முதவிய தோற்: கருவிகளுக்கு வேண்டிய தோலைக் கொடுப்பார். கோயிலில் இசைத் தொண்டு புரிபவர்களுடைய வீணைக்கும் யாழுக் கும் வேண்டிய நரம்புகளை அளிப்பார். கோயில்களில். ஆராதனைக்குக் கோரோசனையைக் கொடுப்பார். . .

இறைவனுடைய அன்பர்கள் உலகத்தில் தொழில் செய்து வாழ்ந்தாலும், அந்தத் தொழிலிலும் இறைவனு டைய திருத்தொண்டு இடம் கொள்ளும். தம்முடைய ஜீவனுேபாயமாகக் கொண்ட தொழில் எதுவான லும், அதிலும் சிவத்தொண்டு செய்வதற்கு வாய்ப்பு உண்டு. இறைவன் திருக்கோயிலுக்குள் சென்று தொண்டு புரியும் , கிலேயைப் பெருமல் இருந்தும், கந்தனர் தம் தொழிலுக்கு ஏற்ற வகையில் அக்கோயில்களுக்குப் பயன்பட்டார். மனம் இருந்தால் வழியும் உண்டாகும் அல்லவா?

ஒவ்வொரு கோயிலிலும் முரசு, பேரிகை முதலிய இசைக் கருவிகள் இருக்கும். அவற்றுக்கு வேண்டிய தோல், வார், நரம்பு ஆகியவற்றைக் கொடுப்பதற்காக நந்தனர் ஒவ்வொரு நாளும் கோயில்களே நோக்கிச் செல் வார். கோயிலில் வாயிலின் புறத்தே கின்று தாம் கொணர்ந்தவற்றைக் கொடுத்துவிட்டு, அங்கே நின்ற படியே கோயிலையும் பார்த்துப் பார்த்து இன்புறுவார்: குதிப்பார்; கூத்தாடுவார்; பாடுவார்.

கோயிலையும் கோபுரத்தையும் தரிசிக்கும் இன்பத்தைத் தம்முடைய தொழிலோடு பிணேத்துக் கொண்டார். கந்தனர். மற்றவர்கள் புலைச்சேரி வாழ்க்கையில் அருவருக்கும் வகையில் வாழ்ந்தாலும், நந்தனர் அவ்வாழ்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/91&oldid=585585" இலிருந்து மீள்விக்கப்பட்டது