பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.6 நாயன்மார் கதை

கையில் தூய்மையும் தொண்டு நெறியும் உடையவராகி விளங்கினர்.

ஒரு முறை திருப்புன்கூர் போய் வரவேண்டும் என்ற ஆவல் அவருக்கு உண்டாயிற்று. அங்கே போய்த் தம்மால் இயன்ற பணிகளைச் செய்யவேண்டும் என்பது அவர் எண்ணம். மிக்க ஆவலோடு அத்திருப்பதியை அணைந்து திருக்கோயிலுக்குச் சென்ருர். திருவாயிற் புறத்தே நின்று உள்ளே உள்ள சிவலிங்கப் பெருமானத் தரிசிக்க ஆவல் கொண்டார். அங்குள்ள பெருமானுடைய திருகாமம் சிவலோக நாதன் என்பது. அவருடைய விருப்பம் நிறை வேறத் தடையாக இருந்தது சங்கிதியில் இருந்த கங் தி. அதைக் கண்டு வருந்திய கந்தனர், இறைவனேத் தரிசிக்க இயலவில்லையே' என்று மனம் வாடித் துயரமடைந்தார். அதுகண்ட சிவபெருமான் தன் சந்நிதியில் இருந்த நந்தியை விலகச் செய்து தரிசனம் தந்தருளின்ை. கந்தனர் வாயிற் புறத்தில் கின்றபடியே சிவபெருமானேத் தரிசித்து ஆனந்தக் கூத்தாடினர். பிறகு அவ்வூரைச் சுற்றி வரும்போது அங்கே ஒரு பள்ளம் இருப்பதைக் கண்டார். திருக் கோயிலுக்குப் போகும் அன்பர்களுக்குப் பயன்படும்படி அங்கே ஒரு குளம் வெட்டலாம் என்ற எண்ணம் அப்போது நந்தனருக்குத் தோன்றியது. அப்படியே அவர் முயன்று அங்கே ஒரு குளத்தை வெட்டினர்.

தம்முடைய உடல் வலிமையிலுைம் தொழிலினலும் சிவத்தொண்டையும் சிவனடியார் தொண்டையும் செய்து வந்த நந்தனருக்கு ஒவ்வொரு நாளும் பெருமானுடைய கினைவாகவே சென்றது. அருகிலும் சேய்மையிலும் உள்ள தலங்களுக்குச் சென்று குளம் வெட்டியும் சுவர் வைத்தும் தோல், வார் அளித்தும் தம் தொண்டு வகைகளைப் பெருக்கிக் கொண்டார். நமக்கு இதல்ை பயன் உண்டா, கழ்மை யாரேனும் புகழ்ந்து பாராட்டுகிருர்களா என்று. பாராமல் தம்மால் இயன்ற தொண்டுகளைச் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/92&oldid=585586" இலிருந்து மீள்விக்கப்பட்டது