பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் காயஞர் 87

வந்தமை கந்தனரின் உண்மையான சிவபக்தியைக் காட்டியது. உயிர்க் குலத்துக்குச் செய்யும் தொண்டுகளே யும் இறைவனுடைய திருத் தொண்டாகவே கருதுவது பெரியோர் இயல்பு. நானும் அவருடைய நிலையில் வசதி களோடு இருந்தால் எவ்வளவோ செங்வேன்' என்று சொல்கிறவர்கள் உண்டு. தொண்டு புரிவதற்கு இதுதான் உரிய பதவி, இதுதான் உரிய வசதி என்ற வரையறை இல்லை. எல்லோரும் தொண்டு புரியலாம். ஆனல் எல் லோருக்கும் ஒன்று இன்றியமையாதது. தொண்டு புரிய வேண்டும் என்ற ஆர்வம் மாத்திரம் இருக்கவேண்டும். அது இருந்துவிட்டால் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் செய்யும் தொண்டுகள் இன்னவையென்று அவர்களுக்கே புலப்படும். -

கந்தனர் அக்காலத்து வருணசிரம அமைப்பின்படி, திருக்கோயிலுக்குள் புக இயலாத நிலையில் இருந்தார். ஊருக்குள்ளும் தம் விருப்பப்படி சென்று பழகும் வாய்ப்பு அவருக்கு இல்லை. ஆனலும் அவர் சிவபிரான் கோயில் களுக்குச் சென்ருர் பக்தி செய்தார்; பலருக்குப் பயன்படும் தொண்டுகளைச் செய்தார். இறைவன் திருக்கோயிலில் முரசு அறைவது ஒரு தொண்டு. அந்தத் தொண்டை நேர் முகமாக நந்தனர் செய்ய இயலாது. ஆயினும் அந்த முரசுக்குத் தோலும் வாரும் கொடுப்பதல்ை முரசத் தொண்டு செய்த பயனும் இன்பமும் அவருக்கு உண்டாயின. தம் கையால் முரசு அறைந்து தொண்டு புரியும் பக்தர் முரசை அறையும்போது இன்புற்ருர். அந்த ஒலியைக் கேட்டு நந்தனரும் இன்பம் அடைந்தார். தம் குழந்தைக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையைத் தங்தை வாங்கித் தருகிரு.ர். அந்தப் பொம்மையை வைத்துக் கொண்டு குழந்தை விளையாடி இன்புறுகிறது. பொம் மையை வாங்கிக் கொடுத்தவர் தாமே அதை வைத்து விள்ே யாடுவதில்லை. ஆனல் குழந்தை விளையாடுவதைக் கண்டு அவரும் மிக்க இன்பத்தை அடைகிருர். இதே மனசிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/93&oldid=585587" இலிருந்து மீள்விக்கப்பட்டது