பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.88 நாயன்மார் கதை

நந்தனருக்கு இருந்தது. அதனல், நாமே திருக்கோயிலுக் குள் சென்று இந்தத் தொண்டுகளைச் செய்ய இயல வில்லையே! என்ற எண்ணம் இன்றி, அத்தொண்டுகளைச் செய்பவர்களைப் பார்த்து, அவற்றில் தாமும் பங்கு கொண்டதாகவே இன்புற்ருர்,

நந்தனர் சிவனடியார்களே ரோட்டவில்லை. இறைவன் திருமஞ்சனத்துக்கு நீர் சுமந்துசெல்லவும் இல்லை. அப்படிச் செய்ய முடியவில்லையே என்று எண்ணி ஏங்கிக் கொண்டு நிற்கவில்லை அவர். குடத்தோடு நீர் அளிப்பதைத்தான் உலகத்தில் சமுதாயச் சட்டம் தடுத்ததே ஒழியக் குளத் தோடு நீர் அளிப்பதைத் தடுக்கவில்லை. அவர் ஒரு குடம் நீர் தரவில்லை; ஆனால் பல குளம் வெட்டிப் பல குள நீர் தந்தார். அவற்றில் எத்தனை தொண்டர்கள் நீராடினர் கள்! இறைவனுடைய திருமஞ்சனத்துக்கு எத்தனே குளங் கள் பயன்பட்டன! இந்த உண்மையை நினைந்து தொண்டு புரிந்தார் நந்தனர்.

இவ்வாறு பல தலங்களுக்குச் சென்று தம்முடைய திருத் தொண்டிற் சிறந்து கின்ற நந்தருைக்கு ஒர் ஆசை எழுந்தது. எல்லாக் கோயில்களிலும் சிறந்தமையால் கோயில் என்று அடையின்றிச் சொன்னலே தன்னை நினைக்கும் தலைமையுடன் விளங்கும் சிதம்பரம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் உண்டாயிற்று. அது வரவரப் பெருகியது. ஒரு நாள் இரவு முழுவதும் தாக்கமே இல்லாமல் தில்லையைப் பற்றியே தினத்துக் கொண்டிருந் தார். அத் திருத்தலத்துக்குச் சென்றவர்கள் அதன் பெருமையைப் பற்றியும் அதன் அமைப்பைப் பற்றியும் சொல்லக் கேட்ட செய்திகள் யாவும் இப்போது அவர் நினைவுக்கு வந்தன. நம்முடைய குலத்தினர்கள் அங்கே சென்று ஒன்றும் செய்ய இயலாதே! பல பிராகாரங்களே யுடைய அக்கோயிலுக்குள் புகுவது நடவாத காரியம். புறத்தே இருந்து தரிசிக்க முடியாது, பெரிய திருக்கோயில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/94&oldid=585588" இலிருந்து மீள்விக்கப்பட்டது