பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் காயனர் 89

இந்த நிலையில் அங்கே போய் என்ன செய்யப் போகிருேம்?" என்ற எண்ணம் தோன்றவே சற்றுச் சோர்வு உண்டா யிற்று. ஆலுைம் அவருடைய விருப்பம் தனியவில்லை. தில்லைக்குச் செல்ல வேண்டும் என்ற காதல் மேலும் மேலும் பெருகியது. நாளேப் போவேன்' என்று துணிக் தாா. - .

மறுநாள் விடித்தது. விரிந்த உலகமும் தாம் வாழும் புலேச்சேரியும் அதில் வாழ்வார்களுக்கு அமைந்திருக்கும் கட்டுப்பாடுகளும் மறுபடியும் கினேவுக்கு வந்தன. கான் அங்கே போய் எதைப் பார்க்க முடியும்? மூவாயிரம் அந்த ணர்கள் இடைவிடாமல் இறைவனுக்குத் தொண்டுபுரியும் திருக்கோயில் அது' என்று சொல்கிருர்கள். அவர்கள் வாழும் இடத்தை நான் போய்ப் பார்க்க முடியுமா? கோயி லுக்கு உள்ளே சிறிதேனும் செல்ல முடியுமா?’ என்ற எண்ணங்கள் வரவே, அன்று புறப்படவில்லை. மறுபடியும் அவர் உள்ளம் அவரை உந்தியது. நாளைக்குப் போகலாம்' என்று ஆறுதல் பெற்ருர், இப்படி நாளேப் போவேன், நாளைப் போவேன்' என்று ஒவ்வொரு நாளாகக் கழிந்து கொண்டிருந்தது.

'சிதம்பரம் போகப் போகிறீராமே? எப்போது போகிறீர்?' என்று அவரைக் கண்டு நண்பர்கள் கேட்பார் கள். நாளைக்குப் போகலாம் என்று எண்ணியிருக்கிறேன். இறைவன் திருவருள் புரியவேண்டும்' என்று சொல்லிக் கொண்டே இருந்தமையால் அவரை யாவரும், நாளேப் போவான்' என்று வழங்கத் தலைப்பட்டனர்.

நந்தனருக்குத் தில்லைக்குச் ச்ெல்லாவிட்டால் உலகில் வாழ்ந்து பயன் இல்லை என்ற அளவுக்கு ஆர்வம் முதிர்ந்தது. ஒரு நாள் புறப்புட்டே விட்டார். கொள்ளிடத்தைக் கடந்து சென்று திருத்தில்லையின் எல்லையில் வந்து நின்ருர். காளைப் போவேன்' என்று சொன்னவர், இன்று வந்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/95&oldid=585589" இலிருந்து மீள்விக்கப்பட்டது