பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நாயன்மார் கதை

என்ற சிலையில் இருந்தார். ஊருக்குள் வேதம் ஒதும் கிடை களும் வேள்வி செய்யும் சாலைகளும் பல இருக்கும் என்று முன்பு கேட்டிருந்தார். வேத ஒலியால் அங்கே கிடைகள் இருப்பதையும், வேள்விப் புகையால் அங்கே வேள்விச் சாலைகள் இருப்பதையும் உணர்ந்து கொண்டார். நாம் எப்படி உள்ளே செல்வது?" என்று அஞ்சினர்.

ஊரின் திருமதிலே வலம் வந்து வணங்கித் திருமதில் வாயிலில் வந்து நின்ருர். இப்படியே இரவும் பகலும் வலம் செய்து கொண்டே வந்து, எம்பெருமானைத் தரிசிக்கும் வாய்ப்பு கமக்கு இல்லையே! என்று உருகி கைந்தார். 'இறைவனுடைய ஆனந்த நடனத்தைப் பற்றி எவ் வளவோ கேட்டிருக்கிறேன். இந்த உடம்பை வைத்துக் கொண்டு நான் எப்படித் தில்லை அம்பலவாணனேத் தரி சிக்க முடியும்?' என்று அரற்றினர். மிகவும் ஏங்கினர். சோர்வு மிகுதியினுல் கீழே படுத்துத் துயின்ருர்.

அப்போது அவருடைய கனவில் சிவபெருமான் எழுங் தருளி, இந்த உடம்புடன் எப்படி நான் நடன தரிசனம் செய்வேனென்று வருந்துகிருயே. நீ அஞ்சாதே. நீ தீயிடை மூழ்கி எழுந்து தில்லை வாழ் அந்தணர்களுடன் நம் முடைய சங்கிதிக்கு வருவாயாக' என்று திருவாய் மலர்ந் தான். அப்படியே தில்லைவாழ் அந்தணர் கனவிலும் தோன்றி, கம்மைத் தரிசிக்கும் பேரார்வத்துடன் திருக் குலத்தில் தோன்றிய கந்தன் என்னும் அன்பன் திருமதிற் புறத்தேபாடு கிடக்கிருன். அவனே அழைத்து வந்து கெருப் பிற் குளிப்பாட்டி என் சங்கிதிக்கு அழைத்து வாருங்கள்' என்று கட்டளையிட்டான். -

நந்தனர் துயிலினின்றும் எழுந்து எம்பெருமானுடைய திருவருளே எண்ணி எண்ணி உருகினர். நாயேனுடைய ஆசை நிறைவேற இயலாததென்றுதானே உலகம் கூறும்? அதை நிறைவேற்றத் திருவருளே துணிந்தபோது யார் எதிர்கிற்க முடியும்? எளியேனிடத்தில் எம்பெருமானுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/96&oldid=585590" இலிருந்து மீள்விக்கப்பட்டது