பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் காயனர் 9t.

குள்ள பெருங் கருணைதான் என்னே!' என்று குதித்துக் கூத்தாடினர்.

கனவு கண்ட அந்தணர்கள் எம்பெருமான் இட்ட

கட்டளைப்படியே திருமதிற்புறத்தை அணுகி கந்தரிைடம் வந்து, ஐயரே, எம்பெருமான் இட்ட கட்டளையை கிறை வேற்றத் தங்களிடம் வந்தோம். தீ அமைத்துத் தரும்படி பெருமான் பணித்தான்' என்று கூறினர். நோயேன் உய்ந்தேன்' என்று கூறி அவர்களே வணங்கினர் கந்தனர்.

அந்தணர்கள் திருமதிலின் தெற்கு வாயிலுக்குப் புறத்தே

வேறு அந்தணர்கள் அமைந்திருந்த தீக்குழிக்கு அவரை அழைத்துச் சென்ருர்கள். அங்கே நந்தனர் இறைவன்

திருவடியை உளத்தே கொண்டு அவ்வெரியை வலஞ் செய்து வணங்கி அதன்கண் மூழ்கினர். மூழ்கியவுடன்

எழுந்தார். அப்போது தேசு பொலியும் திருவுருவும் நூல்

விளங்கும் திருமார்பும் பெற்ற புண்ணிய மாமுனிவர்

கோலத்தோடு விளங்கினர். அவரைக் கண்டு தில்லை வாழ் அந்தணர்கள் கைதொழுது வணங்கினர்கள். எம்பெரு

மான் திருவருகளயும் நாளைப் போவாருடைய பெருமையை யும் எண்ணி எண்ணி அதிசயம் கொண்டார்கள்.

மற்றத் தொண்டர்கள் நீரில் ஆடித் திருக்கோயிலுக் குச் செல்வார்கள். நந்தனரோ நெருப்பில் ஆடித் திருக் கோயிலுக்குள் புகலானர். இறைவன் தீயாடி. அவன் அடியாரும் இப்போது தியாடினர். தாம் அவ்வளவு காலம் வளர்த்த வேள்வித் தியில் புகையையும் புண்ணியத்தையும் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் இப்போது வளர்த்த எரி யில் மக்கட் குலத்தின் புண்ணியப் பயனைப் போன்ற மறை முனிவரைக் கண்டார்கள். இரசவாதம் செய்பவர்கள் செம்பை எரியிலிட்டுத் தங்கமாக எடுப்பதுபோல, இறைவ னுடைய திருவருளால் எரியில் புகுந்த திருக்குலத் திரு மேனி கொண்ட நந்தனர் முனி புங்கவராக எழுந்த அதி சயத்தை அவர்கள் கண்டு மனம் கரைந்தார்கள். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/97&oldid=585591" இலிருந்து மீள்விக்கப்பட்டது