பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நாயன்மார் கதை

ண்ர்கள் சூழ, வாத்தியங்கள் முழங்க, மறையொலி ஒலிக் கத் திருநாளைப் போவார் தம்மைக் கனவில் வந்து அழைத்த அப்பனைக் காணச் சென்ருர்.

திருக்கோபுரத்தைக் கை தொழுது ஏனைய சந்நிதி களைக் கடந்து வலமாக வந்து இறைவன் உலகுய்ய நட மாடும் எல்லேயினைத் தலைப்பட்டார். அப்பால் அவரைக் காணுமல் அந்தணர் அதிசயித்தார். தன்பால் வந்தணேந்த திருத்தொண்டரின் பிறவியையும் வினையையும் ருேக்கி இறைவன் தன் திருவடிக்கண்ணே சேர்த்துக் கொண்டான்.

நந்தனருக்குப் புறவாழ்வில் இறைவனுடைய திருவரு ஞக்கு உரியவராவதற்கு இயலாத கிலே இருந்தது. அவரைப்போன்ற கிலேயில் உள்ளவர்கள் அந்தப் புறத் தடைக்கு அஞ்சி இருந்தார்கள். ஆனல் நந்தனர் அக வாழ்வில் இறைவனுடன் அளவளாவினர். சாதி, குலம் முதலிய தடை ஏதும் அக வாழ்க்கையில் இல்லை. ஆதலின் அவர் தம் அக வாழ்க்கையில் வர வரத் தூய்மை பெற்றுப் புண்ணிய மாமுனிவராகி விட்டார்.

புறத்திலே முனிவராகவும் அகத்திலே புலையராகவும் இருப்பவர் பலர். அவர்களுக்கு இறைவன் அருள் எனிதில் கிடைப்பதில்லை. அகத்திலே முனிவராகவும் புறத்திலே புலேயராகவும் இருந்தார் நந்தனர். போலியாகத் தவ வேடம் தாங்குபவர்கள் தம் வேடத்தைத் தாமே கலைத்துக் கொள்ளலாம். ஆல்ை புலேயராக இருந்த கந்தனருடைய புற வேடத்தை இறைவன் கலைக்க முன் வந்தான். அகமும் புறமும் தவத் தூய்மை தாங்கிய அந்தணர்களைக் கொண்டு அந்த மாற்றத்தை அவன் செய்வித்தான். முன்னவனே

முன் நின்ருல் முடியாத பொருள் உளதோ?

அக வாழ்க்கையில் முனிவராக உயர்ந்து கின்றவருக் குத் தடையாக கின்ற புற வாழ்க்கையை இறைவன் மாற்றிவிட்டான். அவரைத் தன் திருவடி மாமலரில் வண் டிாக உறையும்படி செய்தருளினன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/98&oldid=585592" இலிருந்து மீள்விக்கப்பட்டது