பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருக்குறிப்புத் தொண்ட நாயனர்

தொண்டை கன்னட்டில் தெய்வ மணம் கமழ்வது கச்சியம்பதி. அப்பதியில் ஏகாலியர் குலத்தில் ஒர் அடியார் தோன்றினர். எந்தச் சாதியினராயினும் எந்தத் தொழி லினராயினும் இறைவனுடைய அன்பில் ஊறில்ை அவர் கள் மனிதரில் தேவராகி விடுகிருர்கள். இறைவனுடைய அருளையே எண்ணி அவ்வெண்ணம் மாருமல் தொழில் செய்து வாழ்ந்தவர் அவ்வன்பர். அவருடைய இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. -

சிவபிரானுடைய அடியார்களிடத்தில் ஆராத அன்பு டையவராய், அவர்களுடைய குறிப்பை அறிந்து தொண்டு புரியும் இயல்புடையவராக இருந்தமையால் அவரை யாவரும் திருக்குறிப்புத் தொண்டர் என்று வழங்க லாயினர். நாளடைவில் அவருடைய இயற்பெயரை யாவரும் மறந்துவிடவே, திருக்குறிப்புத் தொண்டர் என்ற பெயரே கிலேத்துவிட்டது. அடியாருடைய துன்னிகளே அன்போடு வெளுத்து அளிக்கும் தொண்டில் அவர் இன்பம் கண்டார். ... , 8 . . . .

இறைவனுடைய திருவருள் நினைவில்ை மனமாசு. தீர்ந்து வாழ்ந்த அப்பெரியார் பிறருடைய ஆடையிலுள்ள மாசைப் போக்கும் தொழிலுடையவராக இருந்தார்; எத். தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப்பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே' என்றபடி அவர் அந்தத் தொழிலில் சிறந்து நிற்கும்போதே சிவ பக்தியிலும் சிறந்து நின்ருர். தொண்டு புரிபவருக்குப் பொருள் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/99&oldid=585593" இலிருந்து மீள்விக்கப்பட்டது