பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருஞான சம்பந்தர் இயற்றிய ஆளுடைய பிள்ளேயார் திருக்கலம்பகத்தில் ஒரு பாட்டில் அவரை, "தளர்வில் புகலியர் அதிபன் நதிதரு வரதன் அணிதமிழ் விரகன்” என்று பாடுகிருர், இங்கே கதிதரு வரதன்’ என்பது கங்கையாற்ருல் வழங்கப் பெற்ற அருளாளன் என்று பொருள்பட்டு முருகனைக்குறிக்கும் என்று கொள்ளலாம். இதல்ை திருஞானசம்பந்தர் முருகனுடைய அவதாரம் என்பது கம்பியாண்டார் கம்பிக்கும் உடன்பாடு என்பது புலகுைம். சேக்கிழார் காலத்தில் வாழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் திருத்தொண்டர் புராணம் இயற்றப்பட்டது. அதற்குப்பின் இரண்டாம் இராசராசன் காலத்தில் ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணி என்ற நாலே இயற்றினர். அதில் முருகனே திருஞான சம்பந்தராக அவதரித்தான் என்பதைக் கூறுகிருர், "தெய்வமகள் என் மருமகள் வள்ளி வதுவை மனமகிழ் பிள்ளை முருகன் மதுரையில் வெல்லுமினிய தொருகதை' - 'எழுமலை கொல்லு மசனி இளமயில் வள்ளி கணவன் இறைமலே வில்லி புதல்வன் இகல்மகள் ஐயை களிறு கழுமலம் உய்ய விரவு கலியுக வெல்லே பொருத் கதைகள்' என்பவற்றில் இக்கருத்தைக் காணலாம். அருணகிரி நாதர் திருப்புகழில் பல பல இடங்களில் முருகனே சம்பந்தராக அவதரித்தான் என்பதைக் கூறுகிருர், - பொறியுடைச் செழியன் வெப் பொழிதரப் பறிதலைப் பொறியிலிச் சமணரத்-தண்பேரும் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/10&oldid=783931" இலிருந்து மீள்விக்கப்பட்டது