பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணச் சோதி 95 திருமணச் சோதி மயிலாப்பூரினின்றும் புறப்பட்ட திருஞானசம்பந்தர் திருவான்மியூர், திருஇடைச்சுரம் திருக்கழுக்குன்றம் முதலிய தலங்களேத் தரிசித்துக்கொண்டு தில்லையை வந்து அடைந்தார். அங்ககளில் உள்ளார் சம்பந்தப்பெருமான வரவேற்க, தில்லைத் திருக்கோயில் சென்று இறைவனைத் தரிசித்துப் பல பதிகங்கள் பாடினர். அங்கே சில நாட்கள் தங்கினர். அவர் அங்கே தங்கியிருப்பதை அறிந்து சீகாழி யில் உள்ள வேதியரும் பிறரும் அங்கு வந்து அவரை வணங்கிச் சென்ருர்கள். அப்பால் ஞானசம்பந்தர் தில்லையினின்றும் புறப் பட்டுச் சீகாழியை அடைந்தார். ஆலயம் சென்று இறைவனே வணங்கித் தம்முடைய திருமாளிகையை கண்ணினர். - அங்கே இருக்கும்போது, பெருமானப் பெற்றவர் களும் மற்ற உறவினர்களும் அவரை அணுகி, "தாங்கள் திருமணம் செய்துகொள்ளும் பருவம் வந்து விட்டது” என்று கூறி, "மறையவர்களுக்குரிய வேள்விகளை வேட்பதற்குத் தகுதி வேண்டும். இல்வாழ்வை மேற் கொண்டால்தான் அது இயலும். ஆதலின் ஒரு கன் னியை மணம்புரிந்து கொள்ள வேண்டும்” என்று விண்ணப்பம் செய்துகொண்டார்கள். அது கேட்ட சம்பந்தர் பாசத் தொடர்பை ஏற்க விரும்பாதவராய், 'பருவம் வந்ததாளுலும் திருமணம் வேண்டாம்” என்ருர், மறையவர்கள் கை தொழுது, "நீங்கள் இவ்வுலகில் வைதிக நெறி கெடாமல் ஓங்கும்படி செய்தீர்கள். ஆகையால் நீங்களும் மறையவர்களுக்குரிய ஆறு தொழில்களையும் செய்து வைதிக நெறியில் ஒழுகுவதே முறை. அதற்காகத் திருமணம் செய்து கொண்டருளவேண்டும்" என்று வற்புறுத்தினர்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/100&oldid=783933" இலிருந்து மீள்விக்கப்பட்டது