பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. திருஞான சம்பந்தர் அது கேட்ட சம்பந்தப்பிரான் ஒருவாறு உடம்பட் டார். மறையவர் யாவரும், இது சிவபெருமான் திருவருள்' என்று எண்ணி உளம் களித்தார்கள்; திருமணத்துக்கு வேண்டியவற்றைச் செய்யத் தொடங்கினர்கள். இப்போது ஆச்சாபுரம் என்று வழங்கும் திருப்பெரு மண கல்லூரில் அக் காலத்தில் கம்பாண்டார் நம்பி என்ற மறையவர் வாழ்ந்தார். அவருடைய திருமகள் எல்லா வகையாலும் சம்பந்தருடைய வாழ்க்கை கிறைவு பெறத் தக்க துணைவியாக இருப்பாள் என்பதை உணர்ந்தார் ஞானசம்பந்தருடைய தங்தையார். அக்கால முறைப்படி கம்பாண்டார் நம்பியிடம் சென்று அவர் திருமகளைத் திருமணம் செய்து தரும்படி கேட்பதற்காகச் சிவபாத இருதயர் திருத்தொண்டர்களும் மறையவர்களும் உடன் வரத் திருப்பெருமணகல்லூர் சென்ருர். அவர்கள் வருவதை அறிந்த கம்பாண்டார் நம்பி நிறைகுடம், குத்து விளக்கு முதலியன வைத்து அவர்களே வரவேற்ருர். பின்பு சிவபாத இருதயர் தாம் வந்த காரியத்தைச் சொல்ல, கம்பாண்டார் கம்பி மிக்க மகிழ்வெய்தி, 'உம்முடைய தவப் புதல்வரும், அம்மை திருமுலைப்பாலில் குழைத்த ஆரமுதுண்டாருமாகிய சம்பந்தப்பெருமானுக்கு எம்முடைய குலக் கொழுந்தாகிய மகளே யாம் உய்ய மணம் செய்து தருகிருேம்” என்று கூறி விடை கொடுத் தனுப்பினர். அவர்கள். மீட்டும் சீகாழி வந்து, கிகழ்ந்த தைச் சம்பந்தருக்குத் தெரிவித்து, மேற்கொண்டுதிருமணத் துக்கு வேண்டிய காரியங்களேச் செய்யத் தொடங்கினர். திருமணத்துக்குரிய நாளும் முகூர்த்தமும் சோதிடர் கள் ஆராய்ந்து கூறினர். அதன்மேல் முகூர்த்த ஒலே எழுதிப் பலருக்கும் அனுப்பிவிட்டு, ஒரு நல்ல காளில் திருமுளைப்பாலிகை தெளித்தார்கள். ஊரெல்லாம் அலங் கரித்தார்கள். ஞானசம்பந்தப்பெருமானுக்குக் கங்கண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/101&oldid=783935" இலிருந்து மீள்விக்கப்பட்டது