பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணச் சோதி 97 தாரணம் செய்து, செய்ய வேண்டிய நற்கருமங்களே இனிது இயற்றினர்கள். பிறகு நல்ல ஒரையில் திருமணத் துக்கு யாவரும் புறப்பட்டார்கள். சம்பந்தப்பெருமான் முத்துச் சிவிகையில் ஏறிச் சென்ருர். உறவினரும் தொண்டரும் வேதியரும் சூழ, வாத்தியங்கள் ஒலிக்க, மறையவர் வேதம் ஒத, தொண்டர்கள் திருப்பதிகங்கள் ஒத, இந்தத் திருமண ஊர்வலம் மெல்ல மெல்லப் பெருமன கல்லூரை வந்து அடைந்தது. - சம்பந்தர் முதலில் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனே வணங்கினர். "திருமணக் கோலம் புனேக்" தருள வேண்டும்' என்று உடனிருந்தோர் சொல்லக் கோயிலுக்கு அருகில் உள்ள திருமடம் ஒன்றை அடைக் தார். அங்கே திருமஞ்சன நீராடி வெண் பட்டாடை அணிந்து முத்தால் அமைந்த அணிகளைப் பூண்டார். ருத்திராட்ச மாலை புனைந்து நெற்றியில் திருநீறு அணிந்தார். இவ்வாறு அலங்காரம் செய்துகொண்டு திருவீதிக்கு வந்து, இறைவனே க் கொழுது, முத்துப் பல்லக்கில் ஏறினர். பலவகை வாத்தியங்கள் முழங்கின. தேவர்கள் பூமாரி பெய்தனர். மறையவர் வேதம் ஒதி வாழ்த்தினர். எங்கும் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் மல்க, ஞானசம்பந்தர் ஊர்வலம் வந்தார். அப்போது சம்பந்தப் பெருமானே மணக்கும் பேறு பெற்ற நங்கையாருக்கும் கங்கணம் தரித்து அலங்காரம் செய்தார்கள். அவர் கல்யாணப் பந்தருக்கு வந்தார். திருஞானசம்பந்தரும் அங்கே எழுந்தருள, திருமண விகனகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. அந்த கங்கை யாரைத் திருக்கரம்பற்றிச் சம்பந்தர் எரிவலம் வந்தார். இந்த அழகிய காட்சியை அங்கு வந்தவர்கள் கண்டு மகிழ்ந்தார்கள். கண் இமையாமல் பார்த்ததல்ை அவர் கள் தேவர்களைப் போல இருந்தார்கள். தி. ஞா. ச:-? * * }

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/102&oldid=783937" இலிருந்து மீள்விக்கப்பட்டது