பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருஞான சம்பந்தர் " புனிதமெய்க் கோலம் டுே புகலியர் வேந்தர் தம்மைக் குனிசிலப் புருவ மென்பூ, ங் கொம்பனு ருடனே கூட தனிமிகக் கண்ட போதில் நல்ல மங் கலங்கள் கூறி மனிதரும் தேவ ராளுர் கண் இமை யாது வாழ்த்தி." அப்போது திருஞானசம்பந்தர் திருவுள்ளத்தில் ஒரு வேதனைக் குறிப்புத் தோன்றிற்று. நாம் விரும்பாத இந்த இல்லொழுக்கம் நமக்கு வந்து சேர்ந்ததே! இனி இவளோடும் சிவபெருமான் திருவடியை அடைவேன்' என்று எண்ணினர். உடனே யாவரும் தம்மைச் சூழ, சிவபெருமான் திருக்கோயிலே அடைக்தார். எம்பெருமானே வணங்கி, "எம் பிரானே, என்னேத் தேவரீர் திருவடியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்ற உணர்வுடன் கின்று, ஒரு திருப்பதிகம் அருள் செய்தார். கல்லுனர்ப் பெருமணம் வேண்டா ; கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பர்ட்டுமெய் ஆப்த்தில; சொல்லுனர்ப் பெருமணம் சூடல ரே தொண்டர்; நல்லூர்ப் பெருமணம் மேயதம் பானே என்பது அப்பதிகத்தின் முதல் பாசுரம். 'கல்வின்மேல் கால் வைத்துச் செல்லும் அம்மி மிதித்தலாகிய செயலேப் பெற்ற பெரிய திருமணத்தினுற் பெறும் இல்வாழ்வு எனக்கு வேண்டாம். திருக்கழுமலமாகிய சீகாழி முதல் பல ஊர்களாகிய பெரிய தலங்களைப் பாடிய அழகிய பாடல்கள் யாவும் (உலகம் முழுவதும் உய்ய வேண்டும். என்று நான் விரும்பியபடி) உண்மையாகவில்லை. (கான் தனியே இருந்து கடமைகளின் கட்டுப்பாடின்றி. எங்கும் திரிந்து தொண்டு செய்ய இயலாத கிலயில் இப்போது கட்டுப்பட்டுவிட்டேன்.) சொல்லில் பரவிய, பெரிய மணமாகிய கருத்தைத் தொண்டர்கள் தம் அறிவிலே தாங்கித் (தொண்டுபுரிய இன்னும் தமக்குக் தகுதியை உண்டாக்கிக் கொள்ளவில்லை: கல்லூர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/103&oldid=783939" இலிருந்து மீள்விக்கப்பட்டது