பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணச் சோதி 99 f பெருமணம் என்னும் தலத்தில் எழுந்தருளிய பெருமானே என்பது இதன் பொருள். "ஞாலம் கின் புகழே மிக வேண்டும்" என்ற பேரார்வம் உடையவர் ஞானசம்பந்தர். எங்கும் சென்று இறைவன் அருள் விளக்கத்தை யாவரும் உணரச் செய்து தொண்டு செய்ய வேண்டும் என்பது அவர் விருப்பம். இல்வாழ்வை மேற்கொண்ட மறையவர்கள் அப்படி எப்போதும் பயணம் செய்துகொண்டே இருக்க முடியாது. தமக்குத் திருமணம் ஆனது ஒரு கால்கட்டு என்று எண்ணினர். இறைவன் திருத்தொண்டு செய்யாமல் வாழ்வதில் அவருக்கு விருப்பம் இல்லே.-இந்தப் பாடல் இத்தகைய மனகிலேயைத் தெரிவிக்கிறது. அப்போது அசரீரி வாக்காக ஒர் ஒலி எழுந்தது. "நீயும் சின்னுடைய மனைவியும் இந்த மணத்துக்கு வந்தவர்கள் யாவரும் இதோ தோற்றும் சோதியுட்புகுந்து நம்மை வந்து அடையுங்கள்" என்று இறைவன் அருளிச் செய்தான். அப்போது திருக்கோயில் முழுவதும் ஒரே சோதி வடிவாய்த் தோன்ற, அதில் ஒரு திருவாயில் தோன்றியது. அதுகண்ட ஞானசம்பந்தப் பெருமான், காத லாகிக் கசிந்து கண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சி வாயவே - என்று தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகத்தை ஒதி, அங்குள்ளவர்கள் யாவரையும் கோக்கி, 'ஈனமாம் பிறவி ரே யாவரும் புகுக' என்ருர். உடனே ஒவ்வொரு வராக அச்சோதியுட் புகலானர்கள். திரு நீலகக்க காயனர் திருமுருக நாயனர் திருநீலகண்ட யாழ்ப்பாண காயனர், சிவபாத இருதயர், கம்பாண்டார் நம்பி ஆகிய வர்கள் தம் மனைவிமாருடன் உள்ளே புகுந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/104&oldid=783941" இலிருந்து மீள்விக்கப்பட்டது