பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திருஞான சம்பந்தர் பிறரும் புகுந்தனர். அங்கே இருந்த யாவரும் சோதியிலே கலந்த பிறகு, திருஞானசம்பந்தர் தம் மனைவியின் திருக் கரத்தைப் பற்றி வலம் வந்து அச்சோதியிலே புகுந்து, இறைவனுடன் என்றும் பிரியாத இரண்டற்ற கிலேயில் கலந்தருளினர். யாவரும் புகுந்த பிறகு அங்கே தோன்றிய சோதி மறையவே, பழையபடி திருக்கோயில் இயல்பாகத் தோற்றம் அளித்தது. பின்பு வந்து கண்டவர்கள் எல்லாம், நிகழ்ந்த செய்தியை அறிந்து, தமக்கு இறை யொளியில் கலக்கும் பேறு கிடைக்கவில்லையே என்று எண்ணி ஏங்கினர். - திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய்மலர்ந்தருளிய திருப்பதிகங்கள் இப்போது சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் முதல் மூன்ருக விளங்குகின்றன. இறைவனுடைய திருவருள் மணமும் செந்தமிழ் மணமும் செறிந்து விளங்கும் அவை, தமிழ் மக்களுக்கு மங்காத செல்வமாய் கின்று கிலவுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/105&oldid=783943" இலிருந்து மீள்விக்கப்பட்டது