பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அவதாரம் , 5 பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப் புகலியிற் கவுணியப்-புலவோனே" என்பது போன்ற பகுதிகள் பல. சைவசமய ஆசாரியர்கள் நால்வரையும் அவதார புருஷர்களாகவே கொள்வது ஒரு வழக்கு. அப்பர் கைலையில் இருந்த சித்தர் ஒருவருடைய அவதாரமென்றும், சுந்தரர் ஆலால சுந்தரரின் அவதாரமென்றும், மாணிக்க வாசகர் நந்தியெம்பெருமானின் அவதாரமென்றும் பெரியோர் கூறுவர். அந்த வகையில் திருஞானசம்பந்தர் முருகப்பெருமானது திருவவதாரம் என்று கொண்டார்கள். இந்த அவதார முறையிலும் முருகனுடைய அவதாரம் மற்ற அவதாரங்களினும் சிறப்புடையது என்பதை யாவரும் அறிவர். திருஞானசம்பந்தர் வரலாற்றைப் பக்திச்சுவை தனி சொட்டச் சொட்ட, மரபு நெறி தெளிவாகப் புலப்பட, செந்தமிழ்ச் சுவை பொங்கப் பாடியிருக்கிருர் சேக்கிழார் சுவாமிகள். அவருடைய திருவாக்கை ஒட்டி இனி அவருடைய வரலாற்றைப் பார்ப்போம். திரு அவதாரம் சோழ நாட்டில் பொன்னியினல் வளம் பெறும் இடத்தில் அமைந்திருப்பது சீகாழி என்னும் திருப்பதி. பல பல காரணங்களால் அதற்குப் பன்னிரண்டு திருகாமங்கள் உண்டு. பழங்காலத்தில் அதன் பெயர் கழுமலம் என்பது. யுகத்தின் கடைசியில் உலகமெல்லாம் பிரளய வெள்ளத்தில் மூழ்க அந்தத் தலம் மட்டும் தோணி போல மேலே மிதப்பகளுல் அதற்குத் தோணிபுரம் என்ற திருநாமம் உண்டாயிற்று. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/11&oldid=783945" இலிருந்து மீள்விக்கப்பட்டது