பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திருஞான சம்பந்தர் அங்கே வேதியர்களின் வேதவொலியும் வேள்விச் சிறப்பும் என்றும் குறைவின்றி இலங்கி வந்தன. சிறந்த அந்தணர் குலத்தில் திருவவதாரம் செய்ய இருந்த ஞான சம்பந்தர் தமக்கேற்ற கிலத்தையும் தலத்தையும் பெற்ருர். சிவபக்தி மலிந்தவர்களும் வேதநெறி வழுவாமல் ஒழுகியவர் களும் கிரம்பிய சீகாழிப்பதி அப் பெருமானுடைய திருவவதாரத்துக்கு எல்லா வகையிலும் பொருத்தமாக அமைந்தது. அதன் சிலவள நீர்வளத்தைச் சொல்ல வந்த சேக்கிழார் ஒர் அழகான கற்பனைக் காட்சியைக் காட்டு கிரு.ர். கன்ருக விளைந்த வயலுக்கு அருகே தண்ணிர் தேங்கிய இடத்தில் தாமரை மலர் மலர்ந்திருக்கிறது. அது செங் தாமரை யாதலின் நெருப்பைப் போலத் தோன்றுகிறது. வயலின் வரப்பில் தித்திப்புக் கனிகளையுடைய மாமரம் ஒன்று வளர்கிறது. அதில் கனிகள் பழுத்து வெடித்துக் குலுங்குகின்றன. தேனும் அருகில் இருக்கிறது. சாறு மரத்திலிருந்து இலையின் வழியே ஒழுகி அந்தத் தாமரை மலரில் வழிகின்றது. அது கெய்யைப் போலத் தோன்று கிறது. மாவிலேயின் வழியே தாமரை மலரில் அது விழும் காட்சி, மாமரங்களும் மாவிலையின் நுனி வழியே அக்கினி யில் நெய்யை ஆகுதி செய்வது போலத் தோன்றுகிறதாம். 'பரந்தவிளே வயற்செய்ய பங்கயமாம் பொங்கெரியில் வரம்பில்வளர் தேமாவின் கனிகிழிந்த மதுநறுநெய் நிரந்தரம் நீள் இலக்கடையால் ஒழுகுதலால் நெடிதவ்வூர் மரங்களும்ஆ குதிவேட்கும் தகைய என மணந் துளதால்." |பரந்த வயல், விளே வயல். வரம்பு - வரப்பு. தேம்ா - இனிப்பு மா. மது ஈறு கெப் - தேனுகிய மணமுடைய கெய். கிரந் தரம் - எப்போதும். இலைக்கடை - இலேயின் நுனி, கெடிது - கெடுங் காலம். வேட்கும் - வேள்வி செய்யும். தகைய தன்மையை உடையன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/12&oldid=783947" இலிருந்து மீள்விக்கப்பட்டது