பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அவதாரம் 2 இத்தகைய வளம் சார்ந்த பதியில் கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்த சிவபாத இருதயர் என்னும் அந்தணர் வாழ்ந்து வந்தார். அவருடைய தரும பத்தினி யின் திருநாமம் பகவதியார் என்பது. அவ்வந்தணர் தம் திருநாமத்துக்கு ஏற்றபடியே எப்போதும் சிவபெருமான் திருவடியை இதயத்தில் வைத்துத் தியானம் பண்ணிக் கொண்டு வந்தார். கற்பிற் சிறந்த பகவதியாரும், சிவபாத இருதயரும் மரபு தவிராமல் இல்வாழ்வை கடத்தி வருதாாகள. தமிழ்நாட்டில் விளக்கமாக இருக்க வேண்டிய சிவ கெறி அயல் சமயத்தாருடைய அதிகாரத்தால் வரவர மங்கி வருவதைச் சிவபாத இருதயர் உணர்ந்தார். விபூதி, ருத்திராட்சங்களே அணியும் வழக்கம் குறைந்துகொண்டு வந்தது. சிவாலய வழிபாடும் குறையலாயிற்று. இவற்றை யெல்லாம் கண்டு மனம் வருந்திய சிவபாத இருதயர் இறைவனே நாள்தோறும் வணங்கி வழிபட்டு, "இந்த கிலே மாறி எங்கும் கின் திருவருள் விளக்கம் பரவும் நாள் வருமா?" என்று ஏங்கினர். மனிதருடைய முயற்சியினல் மாருத வகையில் புறச் சமயத்தார் முயற்சிகள் காள் தோறும் ஓங்கி வருவதைக் கண்டு, ‘இறைவன் திருவருள் வலிமை இல்லாவிட்டால் இந்தக் களையை விலக்க வொண்ணுது என்று வாடினர். "அவன் திருவருள் இருக்கு மால்ை யாரேனும் பெரியவர் திருவவதாரம் செய்து சிவநெறி தழைத்தோங்கச் செய்ய இயலும் என்று சினேக் தார். அவ்வாறு ஒரு மூர்த்தி திருவவதாரம் செய்வதானல் இந்தக் குடும்பத்திலே தோன்றும் வண்ணம் நாம் தவம் செய்வோம்’ என்ற உறுதி அவருக்கு உண்டாயிற்று. அது முதல் அவரும் அவர் மனேவியாரும் இறைவன் திருவருளே எண்ணி, புறச்சமயங்களைப் போக்கும் பிள்ளையை அாள வேண்டும் என்று வேண்டி வரங்கிடந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/13&oldid=783949" இலிருந்து மீள்விக்கப்பட்டது