பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திருஞான சம்பந்தர் சீகாழியில் மூலஸ்தானத்தில் எழுந்தருளி யிருக்கும் பெருமானுடைய திருகாமம் பிரமபுரீசர் என்பது; அம்பிகை திருகிலே நாயகி. அங்கே திருத்தோணி என்று வழங்கும் உயர்ந்த மாடம் ஒன்று உண்டு. அதை மலே யென்றும் கூறுவர். அங்கே உமாபாகராகிய தோணி யப்பர் எழுந்தருளியிருக்கிருர் அம்பிகையைப் பெரிய நாச்சியார் என்று வழங்குவர். காள்தோறும் இத் தம்பதி கள் தோணியப்பரையும் பெரிய காச்சியாரையும் பணிந்து வழிபட்டுத் தம் கருத்தை விண்ணப்பித்துக் கொண்டு வந்தனர். இறைவனுடைய திருவருளால் பகவதியார் வயிறு வாய்த்தார். 'பெருத்தெழும்அன் பாற்பெரிய நாச்சியா ருடன் புகலித் திருத்தோணி வீற்றிருந்தார் சேவடிக்கீழ் வழிபட்டுக் கருத்துமுடித் திடப்பரவும் காதலியார் மணிவயிற்றில் உருத்தெரிய வரும்பெரும்பே றுலகுய்ய உளதாக." (புகலி - சீகாழி. திருத்தோணி யென்றது மாடக் கோயிலே. உருத்தெரிய - குழந்தையின் உருவம் புலப்பட, உலகு உய்யப் பேறு உளதாக.) அப்பால் செய்யவேண்டிய சடங்குகளே யெல்லாம் மறைவழிப்படியே ஆற்ற, கருப்பம் முதிர்ந்து அம்மையார் ஓர் அழகிய ஆண் குழந்தையை நல்ல நாளில் பெற்றெடுத்தார். - குழந்தை திருவவதாரம் செய்த அப்பொழுது நல்ல சகுனங்கள் பல உண்டாயின. சீகாழியில் உள்ள யாவருக்கும் உடம்பில் ஒரு வகையான பூரிப்பும் புளகமும் உண்டாயின. இந்த கன்னிமித்தங்களே உணர்ந்தவர்கள், "சிவபெருமான் திருவருளால் இக் குழந்தை உதித்திருக் கிறது. இவல்ை உலகம் உய்யும்” என்று மகிழ்ந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/14&oldid=783951" இலிருந்து மீள்விக்கப்பட்டது