பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அவதாரம் இ மரங்களெல்லாம் தழைத்து மலர்ந்தன; தென்றல் மெல்ல வீசியது; மழை பெய்தது; தண்ணிர் தெளிவு பெற்றுப் பொய்கைகளில் கிரம்பியது; எங்கும் மங்கல வாத்தியங்கள் முழங்கின. உலகிலுள்ள சராசரங்கள் யாவுமே இந்தக் குழந்தையின் திருவவதாரத்துக்காகக் காத்திருந்து, தோன்றியவுடன் ஆரவாரிப்பது போல இருந்தது. சிவபாக இருதயர் வைதிக முறைப்படி குழந்தைக்குச் செய்ய வேண்டியவற்றை யெல்லாம் குறைவின்றிச் செய்தார். ஜாதகர்மாச் செய்தார். மங்கல மடங்தையர் வாழ்த்தொலி யெடுத்தார்கள். எங்கும் பாலிகையும் பொற் குடங்களும் வைத்தார்கள். பலவகைத் தானங் களேச் செய்தார்கள். வீடுமுழுதும் அழகாக அலங்கரித் தார்கள். வெண் சிறு கடுகு, அகில் முதலியவற்ருல் தூபம் எடுத்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் களிப்புப் பொங்கியது. குழந்தைக்குத் தொட்டிலிட்டுக் கண் குளிரத் தாய் தந்தையரும் பிறரும் கண்டு களித்தார்கள். திருநீற்றை கெற்றியில் இட்டு வேறு காப்பு இப் பெருமானுக்கு வேண்டாம் என்று அந்த ரட்சையே காப்பாக கிற்க, மகிழ்ந்தார்கள். தொட்டிலில் இட்டுத் தாலாட்டி ஈலம் செய்தார்கள். - - குழந்தை, நன்கு வளர்ந்து அவ்வப் பருவத்துக்கு ஏற்ற விளையாடல்களைப் புரிந்து கண்டாரை மகிழ்வித்தது. செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம் முதலிய பருவங் கள் தாண்டித் தளர்நடை கடந்து வீதியிலே சிறு தேருருட்டி விளையாடினர். இவ்வாறு வளர்ந்தருளிய குழந்தைக்கு இரண்டாண்டு கிரம்பி மூன்ருவது ஆண்டு தொடங்கியது. சிவபிரானுடைய திருவருளேப் பெறும்பொருட்டுச் செய்யும் தவத்தின் முளைபோல அப் பெருமான் வளர்ந்தார். மூன்ருவது ஆண்டில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/15&oldid=783953" இலிருந்து மீள்விக்கப்பட்டது