பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 திருஞான சம்பந்தர் ஞானப்பால் அன்று வழக்கம்போல் சிவபாத இருதயர் காலையில் நீராடப் புறப்பட்டார். திருக்கோயிலே அடுத்திருக்கும் பிரம தீர்த்தத்தில் ரோடுவது வழக்கமாதலின் அதனே நோக்கிப் புறப்படுகையில் அவர் குழந்தை, 'நானும் வருவேன்' என்று அழுதார். அந்தணர் சினங்கொண்ட வரைப்போல் அவரை அதட்டினர். குழந்தைப் பெருமான் அழுகையை கிறுத்தாமல் காலத் தப்புத்திப்பென்று வைத்து அவரைத் தொடர்ந்தார். அது கண்ட தங்தையார், "சரி, வா’ என்று அழைத்துச் சென்ருர், திருக்கோயிலைச் சார்ந்த திருக்குளத்திற்குச் சென்ற சிவபாத இருதயர் தம் இளஞ் செல்வரைக் கரையில் உட்காரவைத்துத் தீர்த்தத்தில் இறங்கி நீராடிச் செய்ய வேண்டியவற்றைச் செய்யலானர். ரோடிப் பின்பு அகமருஷண மந்திரம் ஜபித்து மூழ்கினர். அவர் தண்ணி ரில் மூழ்கியிருந்த போது அவரைக் காணுது அலமந்த இளம் பெருமான் நாலு திசையும் பார்த்தார். அருகே இருந்த திருத்தோணியாகிய கோயிலைப் பார்த்து, 'அம்மா! அப்பா!' என்று அழைத்து அழுதார். கண்மலர்களில் ர்ே ததும்பக் கையால் கண்ணேப் பிசைந்து இதழ் துடிக்கப் புண் ணியக் கன்று போன்ற அப்பெருமான் அழுதது, உலகம் உய்யக் காரணமாயிற்று; மறை ஒலி பெருகவும் உயிர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகவும் அவர் அழுத அழுகை ஏதுவாக அமைந்தது. 'கண்மலர்கள் நீர்ததும்பக் கைம்மலர்க ள ஈற்பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடைதுடிப்ப எண்ணில்மறை ஒலிபெருக எவ்வுயிரும் குதுகலிப்பப் புண்ணியக்கன் றனையவர்தாம் பொருமிஅழு தருளினுள்" என்று அதனைச் சேக்கிழார் பாடுகிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/16&oldid=783955" இலிருந்து மீள்விக்கப்பட்டது