பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப்பால் 11" குழந்தைப்பிரான் அழும்போது திருத்தோணியில் வீற்றிருந்த தோணியப்பர் உமாதேவியாரோடும் விடையின் மேல் எழுந்தருளி, அப்பிரான் அருகே வந்து கின்ருர். உமாதேவியாரை அக்குழந்தைக்குப் பால் கறந்து அருத்தும் படி பெருமான் அருள் செய்ய, அவ்வண்ணமே கருணையே வடிவாய் விளங்கும் எம்பெருமாட்டி ஒரு பொற் கிண்ணத்தில் தன் திருமுலைப்பாலேக் கறந்து ஊட்டினள். அந்தப் பாலே உண்ட பிள்ளையார் தம் முன்னே நிலை மாறிச் சிவஞான சம்பந்தர் ஆனர். அப்போது அவரிடம் சிறைந்த ஞானத்தை நான்கு வகையாகப் பகுத்துக் கூறுகிருர் சேக்கிழார். 'சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஒங் கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம்.உணர்ந்தார் அந்நிலையில்.” சிவன் அடியே சிந்திக்கும் ஞானம், பவத்தை மாற்றும் ஞானம், கலைஞானம், மெய்ஞ்ஞானம் என்ற நான்கும் சம்பந்தரிடத்திலே வந்து அமைந்தனவாம். இந்த நான்கும் பரஞானம், அபரஞானம் என்பவற்றின் கூறுபாடுகள் என்று சிலர் கொள்வர். நான்கு வேறு வகையாகப் பிரித்துக் காட்டியதற்கு ஏதேனும் பயன் இருக்க வேண்டும். அதனே இங்கே சற்று ஆராய்வது பயன் உடையதாக இருக்கும். ஒர் ஆத்மா ஞானம் பெறவேண்டுமானல் அதற்கு இறைவன் திருவருள் துணே சிற்க வேண்டும். ஞானத்தைத் தமிழில் அறிவு என்று சொல்வார்கள். அந்த அறிவு வெவ்வேறு விலையில் வெவ்வேருக கிற்கும். முதலில் இறைவன் உள்ளான் என்ற அறிவு வரவேண்டும். அவனே நமக்கு எல்லாவற்றையும் வழங்கினன் என்ற அறிவு பிறகு தோன்ற வேண்டும். பிறவித் துயரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/17&oldid=783957" இலிருந்து மீள்விக்கப்பட்டது