பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 திருஞான சம்பந்தர் போக்குவதற்கு அவனருளே யன்றி வேறு போக்கில்லே என்ற அறிவு பின்பு உண்டாக வேண்டும். அந்த அருளைப் பெற வழி இன்னதென்று தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்துகொண்டு முயற்சியில் ஈடுபடும்போது வரவர அநுபவம் ஏறிவரும். அப்போது அநுபவத்தோடு கலந்து வரும் ஞானம் ஊறி வரும். அநுபவம் இன்றி வரும் ஞானம் நூலறிவு: அபரஞானம் என்றும், பரோட்சம் என்றும் கூறுவது அது. அதுபவமாக வரும் ஞானம் வாலறிவு அதையே பரஞானம் என்றும் அபரோட்ச ஞானம் என்றும் சொல்வார்கள். இங்கே, ஊன சம்பந்தம் பெற்ற மக்களில் ஒருவராகத் தோன்றிய சம்பந்தப் பெருமான் அம்மை தந்த பாலால் ஞானசம்பந்தம் பெற்ருர். அதுபவ முதிர்ச்சியிலே, ஞானம், ஆனந்தம், உண்மை என்று வேறு வேருகக் கூறப்படுவன அசீனத்தும் ஒன்ருகவே கிற்கும். அதுதான் சச்சிதானந்தம்: சத்தென்ருலும், சித்தென்ருலும், ஆனந்தம் என்ருலும் ஒன்றனேயே சுட்டும் கிலே அது. அந்த முடிந்த கிலேயே மெய்ஞ்ஞான கிலே. அது கைவரப் பெற்ருர் சம்பந்தர். அந்த ஞானம் இந்திரியங்களுக்கும் மனத்துக்கும் அப்பாம் பட்டது. உயிரின் அதுபவமாக நிலவுவது. அதை 'உணர்வரிய மெய்ஞ்ஞானம்" என்று சேக்கிழார் குறிக்கிரு.ர். ஆல்ை அந்த அநுபவ கிலேக்குமுன் மூன்று படிகளைக் கடந்தார் சம்பந்தர். பிரபஞ்சச் சேற்றில் உழன்று பல பொருள்களில் ஆசை வைத்து அவற்றைப்பற்றியே சிந்திப்பவனுக்கு ஞானம் கிட்டாது. உலகப் பொருளின் கிலேயாமையை உணர்ந்து இறைவன் ஒருவனே என்றும் கிலேயான பொருளென்பதைத் தெளிந்து அவனுடைய அடியையே கினேந்திருக்கும் அறிவு மிகச் சிறந்தது. அந்த கிலே வந்தால் தான் பற்றற சிற்கும் அதுபவம் உண்டாகும். முதலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/18&oldid=783959" இலிருந்து மீள்விக்கப்பட்டது