பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப்பால் - 13 சம்பந்தப் பெருமானுக்கு, "சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவ ஞானம்' வந்தது. "மற்றுப் பற்றெனக் கின்றிகின் திருப் பாதமே மனம் பாவித்தேன்" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் சொல்லும் கிலே அது. அது கனிந்தது; கணத்திலே சம்பந்தப் பெருமானுக்கு இந்தக் கனிவு வந்துவிட்டது. உடனே அதன் பயனுக இனிப் பிறவி இல்லை என்றுள்ள நிலைக்கு ஏற்ற ஞான சித்தி கிடைத்தது. பவம் என்பது பிறப்பு. அதனை அடியோடு மாற்றிப் போக்கும் ஞானம் உண்டாயிற்ரும். 'பவமதன அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்” என்று அதனேக் கூறுகிருர். அவன் அடியையே சிந்திக்கும் ஞானத்தின் வழியே இது பிறப்பது என்பதையும் சுந்தரர் வாக்கிலே காணலாம். 'மற்றுப்பற்று எனக்கு இன்றி கின் திருப்பாதமே மனம் பாவித்தேன்’ என்றவர் தொடர்ந்து, 'பெற்றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்” என்ருர். பாதமே மனம் பாவித்தலும், பிறவாத தன்மை வந்ததும் விளைவுகள். அவ்விரண்டுக்கும் ஏதுவான ஞானங்களே, 'சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனே அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்" என்னும் இரண்டும் ஆகும். உண்மையை உணர்ந்து முயன்று இனிப் பிறவா வகையில் வினைகளைச் சுட்டெரித்து நிற்பவர்கள் இறைவன் திருவருளின்பத்தைப் பெறுவார்கள். இங்கே ஞான சம்பந்தப் பெருமான் இவ்விரண்டு ஞானத்தையும் பெற்றதோடு கின்றிருந்தால் தம்மளவிலே இறையின்பத் தில் திளேத்திருப்பார். ஆனல் அவருடைய திருவவதாரம் தமிழ்நாடு உய்வதற்காக எடுத்தது. சமய ஆசாரியராகத் திகழ வேண்டிய செல்வர் அவர். குருநாதராகத் திகழ்ந்த வர்கள் பலர். அவருள் இப்பெருமான் "திருநெறிய தமிழ்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/19&oldid=783961" இலிருந்து மீள்விக்கப்பட்டது