பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருஞான சம்பந்தர் பாடி அதல்ை தமிழுலகம் உய்வை அடைவதற்காகவே போக்தவர். ஆதலின் அதற்கு ஏற்ற கலே ஞானத்தை அவர் பெற்ருர். பிற கலைகள் யாவற்றையும் விடக் கல்லாக் கலையாகச் சிறப்புப் பெறுவது கவிதைக் கலை. தேவாரம் பாடித் தமிழுலகம் இறைவனருளேப் பெற வைத்த வள்ளல் சம்பந்தர். கவிதைக் கலேயிலே சிறந்து கின்றவர். கலேயியே சிறந்தது கவிதை. அந்தக் கவிதை களிலும் இறைவன் இசை பாடும் கவிதை மிகச் சிறந்தது. அவற்றுள்ளும் சம்பந்தப் பெருமானுடைய திருவாக்குப் பின்னும் சிறந்தது எழுதும் மறை என்று போற்று வதற்குரியது. அது அவர் பால் மலர்வதற்கு ஏற்ற வகையில், உவமை இலாக் கலை ஞானம்' அவரை வந்து அடைந்தது. அப்பால் ஜீவன் முக்த நிலையில் அநுபவமே ஞானமாக கிற்கும் "உணர்வரிய மெய்ஞ்ஞானம்' அவர் பால் தேங்கியது. சைவ சித்தாந்தத்தில் கூறியபடி பசுகரணங் கள் எல்லாம் மாறிப் பதிகரணங்களாக கிற்க, மெய்ஞ்ஞான சம்பந்தராக விளங்கினர். ஆகவே, ஞானசம்பந்தர் சிவஞான சம்பந்தராகவும், பவஹர ஞான சம்பந்தராகவும், கலே ஞான சம்பந்த ராகவும், மெய்ஞ்ஞான சம்பந்தராகவும் விளங்கினர் என்பதை உணரலாம். அம்மை இந்த அருட் குழந்தைக்கு நாலு மிடறு பால் ஊற்றினுள்போலும் ஒவ்வொரு மிடற்றிலும் ஒவ்வொரு ஞானம் விறைந்திருக்க வேண்டும். அப்படி ஒரு கற்பனை செய்யும்படி சேக்கிழார் பாடல் அமைந்திருக்கிறது. ~ 'சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனே அறமாற்றும் பாங்கினில்ஒங் கியஞானம், உவமையிலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம்.உணர்ந்தார், அந்நிலையில்." "செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே' என்று சம்பந்தர் பாடுவார். அந்தச் செல்வத்தையே, ‘சிவனடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/20&oldid=783964" இலிருந்து மீள்விக்கப்பட்டது