பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறித் தமிழ் உதயம் 15 சிந்திக்கும் திரு என்று சேக்கிழார் கூறினர். இங்கே உள்ள சிவஞானம் என்றது முடிந்த முடிபாகிய மெய்ஞ் ஞானத்தை அன்று. பவம் - பிறப்பு. அற முற்றும். முற்றும் மாற்றும் தன்மையிலே சிறந்து நிற்கும் ஞானம். இந்த ஞான விளைவைப் பெறுவதற்கு அவர் முன்னேத் தவம் செய்தவர் என்பதைப் புலப்படுத்த, தவ முதல்வர்' என்ருர். தவத்தில்ை முதன்மை பெற்றவர் என்று பொருள் கொள்ள வேண்டும். அங்கிலேயில் என்று சுட்டியது, அம்மை பால் ஊட்டிய அந்த கிலேயிலே என்ற கருத்தை உடையது. வித்து கட்டு நீர் ஊற்றிச் செடியாகி மரமாகிப் பூத்துக் காய்த்துக் கனிந்தது போலின்றி, மாய வித்தைக்காரர்கள் கனிகளுடன் மாஞ்செடியை வருவித் தாற் போல, மகாசக்தியின் திருவருளால் விளைவு விரைவில் வந்தது என்பது கருத்து. உணர்ந்தார் அங்கிலேயில்' என்ருர்; அறிதல் வேறு; உணர்தல் வேறு. அதுபவத்தோடு கலந்து வருவது உணர்வு: இங்கே சம்பந்தப் பெருமான் அநுபவமாக இவற்றைப் பெற்ருர் என்று கொள்ள வேண்டும். திருநெறித் தமிழ் உதயம் சிவஞானப் பாலமுது வாயிலிருந்து வழிய கின்ருர் ஞானசம்பந்தப் பிள்ளேயார். அப்போது ரோடிக் கரைக்கு வந்த தங்தையார் அவரைப் பார்த்தார். வாயிற் பால் வழி வதைக் கண்டு, 'நீ யார் கொடுத்த பாலே உண்டாய்?" என்று கையில் ஒரு கோலே எடுத்துக்கொண்டு கேட்டார். அந்தச் சிறிய பெருந்தகையார் உடனே ஆனந்தக் கண்ணிர் துளும்ப, தம்முடைய வலக்கைச் சுட்டு விரலே நீட்டித் தோணியப்பரைக் காட்டியபடியே ஒரு பாசுரத்தைப் பாடத் தொடங்கினர் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/21&oldid=783966" இலிருந்து மீள்விக்கப்பட்டது