பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 திருஞான சம்பந்தர் தோடுடைய செவியன்விடை ஏறியோர் து வெண் மதிசூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசிஎன் உள்ளம் கவர்கள்வன் ஏடுடைய மரைான்முனே நாள் பணிந்து ஏத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்அன்றே! என்ற தண்டமிழ்த் திருமறை உதயமாயிற்று. உவமை யிலாக் கலைஞானம் தரும் பாலே உண்ட வாயிலிருந்து இந்த அற்புதப் பாடலும் அதைத் தொடர்ந்து மற்றப் பாடல் களும் பொங்கி வழிந்தன. அவர் தந்தையார், "உனக்கு யார் பால் தந்தார்?’ என்று கேட்ட கேள்விக்கு நேர்விடை பாக இல்லே இது. "இதோ இவரே!” என்று சுட்டிக்காட்டி குலும், பாட்டு ஒரு பொருளேத் தந்தவரைச் சொல்ல வில்லை; தம் பொருளேக் கொண்டவரைச் சொல்லுகிறது. கொடுத்த பொருள் வழியக் கண்ட தங்தைக்கு, உள்ளே ஆனந்த வெள்ளம் பொங்கி வழிவதையும் வெளியே திருநெறித் தமிழ் வெள்ளம் பொங்கப் போவதையும் புலப்படுத்தி இப்பாசுரத்தைப் பாடினர் சம்பந்தர். யாரோ அயலார், எங்த உறவின் முறையும் இல்லாதார் தம் குழந்தைக்குப் பால் கொடுத்துச் சென்ருரோ என்ற ஐயத்தால் சிவபாத இருதயர் கேட்டார். சம்பந்தப் பெருமான், ‘இறைவன் கட்டளையிட இறைவி பால் கொடுத்தாள்” என்று சொல்வியிருக்கலாம். அவர் அப்படிச் சொல்லவில்லை. “இத்தகைய திருக்கோலத்தில் வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதோ இந்தப் பிரமபுரமாகிய சீகாழியில் உள்ள பெருமான்' என்று சொல்கிருர். பாலைப் பற்றிய பேச்சே பாட்டில் வரவில்லை. - . ! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/22&oldid=783968" இலிருந்து மீள்விக்கப்பட்டது