பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறித் தமிழ் உதயம் 1? ஆயினும் அதற்குள் கேள்விக்குரிய விடையும் அடங்கி யிருக்கிறது. "எனக்குப் பால் கொடுத்தவனத்தானே கேட்கிறீர்கள்? அவன் என் உள்ளத்தையே கவர்ந்து கொண்டான். உலகில் யார் யாரையோ உறவினராக எண்ணியிருந்த பழைய உள்ளம் எனக்கு இப்போது இல்லை. தானே நினைத்துத் தானே இன்ப துன்ப உணர்ச்சி பெறும் உள்ளத்தை அவன் கவர்ந்து கொண்டான். இனி அந்த உள்ளம் என்னிடம் இல்லை; அவனிடம் இருக்கிறது; அவன் வசப்பட்டிருக்கிறது. அவன் அதனை எப்படி யெல்லாம் இயக்குகிருனே, அப்படியெல்லாம் இயங்கும். நினைக்கச் செய்தால் சினேக்கும்; மறக்கச் செய்தால் மறக்கும். இனி ஒரு கணமும் அவனே விட்டுப் பிரியாது' என்பதையெல்லாம் உள்ளடக்கி, "என் உள்ளம் கவர் கள்வன், பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்' என்ருர். பிறரை மயக்குபவர் தம்மிடத்திலுள்ள பொருளைக் காட்டியும் குணத்தைக் காட்டியும் செயலேக் காட்டியும் அவர் உள்ளத்தைத் தம் வசமாக்குவது வழக்கம். இங்கே இறைவன் எவற்றைக் காட்டிச் சம்பந்தக் குழந்தையின் உள்ளத்தைக் கவர்ந்தான்? தோடு உடைய செவியைக் காட்டினன்; தான் ஏறி வந்த விடையைக் காட்டின்ை: தாவெண்மதியைக் காட்டினன்; உடம்பெல்லாம் பூசிய சுடலைப் பொடியைக் காட்டினன். எல்லாம் வெண்மை நிறம் உடையவை. உலகிலுள்ள குழந்தைகளுக்கு வண்ண வண்ண விளையாட்டுப் பண்டங்களே வாங்கித் தருவார்கள். கண் ணேப் பறிக்கும் வண்ணப் படங்கள் உள்ள புத்தகங்களை அளிப்பார்கள். உலகியலில் பல நிறங்களோடு ஊடாடிப் பல குணங்களைப் பெற்றுப் பல செயல்களைச் செய்ய இருக்கும் குழந்தைகளாதலின் பலவகை வண்ணங்களைக் கண்டு அவை மகிழ்ச்சி அடைகின்றன. ஆனல் இந்தக் தி. ஞா. ச.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/23&oldid=783969" இலிருந்து மீள்விக்கப்பட்டது