பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திருஞான சம்பந்தர் குழ்ந்தையோ ஞானக் குழந்தை. ஞானம் தூயது; அதற்கு வெண்மை கிறம் அடையாளம். குணங்கள் பலவானுலும் அவற்றைச் சத்துவம், ராஜசம், தாமசம் என்ற மூன்றுக்குள்ளே அடக்குவார்கள். இவற்றிற்கு முறையே வெண்மை, செம்மை, கருமை என்பவற்றை கிறமாகக் கூறுவார்கள். எம்பெருமாட்டி ஊட்டிய ஞானப்பால் வெண்மை நிறம் கொண்டது. அதனே உண்ட பிரான் அாய சத்துவ குணமே பெற்ருர். அவர் கண்கள் இறைவன் திருக்கோலத்தில் சத்துவ குணத்தைக்காட்டும் வெண்மைப் பொருள்களேயே கண்டு மகிழ்ந்தன. இந்தக் குழங்தை இறைவன் காட்டிய திருக்கோலத் திலுள்ள மற்றவற்றைப் பின்னலே கினைத்துப் புகழப் போகிறது. ஆயினும் முதல்முதலாக கினேவுக்கு வருபவை இந்த வெண்மை கிறம் பெற்ற பொருள்களே. தூய சத்துவ குணத்தை கினேக்கச் செய்யும் வண்ணத்தை உடையவைகளே அக்குழங்தையின் உள்ளத்தை எடுத்த எடுப்பில் கொள்ளே கொண்டன. தோடு - ஒக்ல; இது வெள்ளேயானது. "வெள்ளோலே கண் பார்த்துக் கையால் எழுதானே' என்பது ஒரு பழம் பாட்டு. விடையாகிய வாகனமும் தர்மரிஷபமானதால் வெள்ளேயானது. "வேதம் ஓதி வெண்ணுரல் பூண்டு வெள்ளே எருதேறி' என்று வேறு ஒரு பாட்டில் ஞான சம்பந்தர் பாடுவார். மதியைத் துrவெண் மதி என்ருர். இறைவனுடைய திருமுடியிலே இருப்பது பிறை. முழுமதிக்காவது கறை உண்டு. பிறையில் அது இல்லை. ஆதலின் துாவெண்மதி ஆயிற்று. சுடலைப் பொடி வெண்மை நிறமுடையது. 'வெந்த வெண்ணிறணிந்து' என்பது சம்பந்தர் பாசுரம். - தோடுடைய செவி என்பது அர்த்தகாரீசத் திருக் கோலத்தில் வாமபாகத்துத் திருச்செவியைக் குறிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/24&oldid=783970" இலிருந்து மீள்விக்கப்பட்டது