பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறித் தமிழ் உதயம் oig இடக்காதில் ஒலயும், வலக்காதில் சங்கக்" குழையும் மாதிருக்கும் பாதிய்ளுகிய இறைவன் அணிந்திருக்கிருன். தோலும் துவிலும் குழையும் சுருள்தோடும் என்று பாடுவார் மாணிக்கவாசகர். - சம்பந்தப் பெருமானுக்குப் பாலக் கறந்து வழங்கியவர் உமாதேவியார். அவர் தந்த பாவின் பயனே இப்போது பாடலாக வருகிறது. உமா தேவியாரும் சிவபெருமானும் வேறல்லர். இதனே அர்த்தநாரீசுவரத் திருக்கோலம் கினேவூட்டுகிறது. தமக்குப் பால் கொடுத்த பிராட்டியை எண்ணி வாமபாகக் காதைச் சிறப்பித்து, தோடுடைய' என்று எடுத்தார். உடனே சக்தியும் சிவமும் வேறல்லர் என்ற உண்மையை உணர்த்த, 'செவியள் என்று பாடாமல், 'செவியன்' என்று பாடினர். வாமபாகத்தை கினேப்பவர் தோடுடைய செவியைச் சொல்லாமல் வேறு ஒன்றைச் சொல்லியிருக்கலாம்ே! திருவடியைச் சொல்லலாம். இங்கே சம்பந்தப் பெருமான் இனித் தேவாரப் பதிகங்களால் இறைவனுடைய புகழைப் பாடுவதையே தம் வாழ்க்கைப் பணியாக ஏற்றுக்கொள்ளப் போகிரு.ர். அப்பாடல்களைப் பாடும்போது அவை சென்று சேரும் இடம் செவியே அல்லவா? அதல்ை அதை முதலில் பாடினர். சேக்கிழார் பெரிய புராணத்தில் இதை எடுத்துச் சொல்கிரு.ர். - 'பல்லுயிரும் களிகூரத் தம்பாடல் ப்ரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் - - - - . சிறப்பித்து" என்று கூறுகிரு.ர். * : " , , இறைவனுடைய திருச்செவியில் இரண்டு கந்தருவர் கள் தோடாக இருந்து எப்போதும் இசை பாடிக்கொண்டே இருக்கிருர்களாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/25&oldid=783971" இலிருந்து மீள்விக்கப்பட்டது