பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருஞான சம்பந்தர் "தோடுவார் காதன்றே தோன்ருத் துணேஐயர் வாடுவர் ஓரிருவர்க் கிட்ட படைவீடே' என்பது திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம். அந்தச் செவி இசைப் பாடலேக் கேட்பதில் விருப்பம் உடையது. ஞானசம்பந்தப் பெருமான் பாடும் தேவாரப் பதிகங்கள் பண்ணுேடு கலந்த இசைப்பாடல்கள். அவற்றைச் சார்த்துவதற்கு முன்னமே இசையின் சுவை கண்ட இறைவனுடைய தோடுடைய செவியை அல்லாமல் வேறு சிறந்த இடம் எது? தேவாரம் வேதம் போன்றது. அதைத் தமிழ் வேதம் என்றே கூறுவர். வடமொழி வேதம் எழுதாக் கிளவி. தமிழ் மறை எழுதும் மறை. வடமொழி வேதம் ஓம் என்ற பிரணவத்துடன் தொடங்குகிறது. இங்கே, ஒ என்ற எழுத்தைப் பீடம் போன்ற வேறு ஓர் எழுத்தோடு சேர்த்து வைத்துத் தோ” என்று தமிழ் வேதத்தை தொடங்கினர் ஞானசம்பந்தப் பிள்ளையார். இதையும் சேக்கிழார் சொல் கிருர். 'எல்லையிலா மறைமுதல்மெய் யுடன்னடுத்த எழுதுமறை மல்லல்தெடுந் தமிழ்ர்ன் இம் மர்நிலத்தோர்க் குரைசிறப்ப" என்பது அவர் கூறுவது. "அகந்தாவை வேதா என்று சொல்லும் வண்ணம் எல்லேயின்றிப் படர்ந்து கிடப்பது எழுதாத மறை. அதன் முதலில் விளங்குவது பிரணவம். அதனே ஒரு மெய்யெழுத்துடன் வைத்துத் தொடங்கிய எழுதும் மறை தேவாரம். அதை நெடுந்தமிழால் மாசிலத்தோர்க்குப் புகழ் சிறக்கும்படி சம்பந்தர் பாடினராம். உலகமெல்லாம் பிரளயத்தில் மூழ்கிக் கிடக்கச் சீகாழி மட்டும் தோணியைப் போல மிதந்தமையால் தோணிபுரம் என்று பெயர் பெற்றது. பிரளயம் வடிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/26&oldid=783972" இலிருந்து மீள்விக்கப்பட்டது