பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன நமதே 31 பிறகு பிரமதேவன் இத் தலத்துக்கு வந்து பூசித்துப் படைப்புத் தொழிலுக்குரிய ஆற்றலைப் பெற்றுப் படைக்கத் தொடங்கினன். ஆதலின் இதற்குப்பிரமபுரம் என்ற பெயர் வந்தது. "ஏடுடைய மலரான் முனோாள் பணிந்து ஏத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான்' என்பது இந்த வரலாற்றை உளங்கொண்டு கூறியது. உலகின் தோற்றத்துக்கு மூலமான அருளே இறைவன் வழங்கிய இடம் பிரமபுரம். அத்தலமே தமிழ்மறையாகிய தேவாரம் தொடங்குவதற்கும் இடமாயிற்று. இறைவன் திருவருள் துணைகொண்டு வேதத்தை எப்பொழுதும் கான் முகன் ஒதிப் பணிபுரியும் இடத்தில் தமிழ் வேதத்தைப் பாடிப் பணிபுரியும் சம்பந்தப் பிரான் அருள் பெற்ருர். ‘'தோடுடைய செவியன்' என்று தொடங்கிய பாசுரத் தோடு மேலே ஒன்பது பாடல்களையும், அப்பால் பதினே ராவது பாடலாகிய திருக்கடைக் காப்பையும் பாடி முடித்தார் சம்பந்தர். அந்தக் கடைசிப் பாட்டில், 'ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த, திருநெறிய தமிழ்” என்று தாம் பாடிய பாசுரங்களேக் கூறிக்கொள்கிருர். இறைவன் திருவருள் பெறும் நெறியிலே கம்மைச் செலுத்தும் தமிழாதலின், திருநெறிய தமிழ் என்ருர். இதைக் கொண்டு இப்போது தேவாரத் தைத் திருநெறித் தமிழ் என்று வழங்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. - ஆணை நமதே திருஞான சம்பந்தராக விளங்கிய பெருமானுடைய திருவாயினின்று எழுந்த இன்னிசைப் பதிகத்தைக் கேட்ட அவர் தந்தையாராகிய சிவபாத இருதயர் இறைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/27&oldid=783973" இலிருந்து மீள்விக்கப்பட்டது