பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23, திருஞான சம்பந்தர் திருவருளே எண்ணி வியப்பெய்தினர். அப்பால் ஞானக் குழந்தையார் இறைவன் திருக்கோயிலுக்குள் சென்று தொழுது வணங்கித் திருப்பதிகம் பாடியருளினர். இதற்குள் இங்கே நிகழ்ந்த அற்புதச் செயல் ஊரெல்லாம் பரவிவிட்டது. மக்கள் திரண்டு வந்து திருக்கோயில் வாயிலில் சம்பந்தரைத் தரிசித்து இன்புறக் கூடினர்கள். ஞான இளங்கன்று ஆலய வழிபாடு செய்து புறம் போக்தார். சிவனடியார்கள் கூடி ஆரவாரம் செய்தார்கள்; பாடினர்கள். 'சீகாழி மாநகரில் இருந்த பெரியோர்கள் செய்த தவப்பயனே!” என்று சிலர் வாழ்த்தினர். “கவுணிய குலத்தினருக்கு மதிப்பு உண்டாக்கிய பெருஞ் செல்வமே!” என்று சிலர் போற்றினர். "கலைஞானம் திருவருளால் கிரம்பப் பெற்ற ஆழமான கடல் போன்ற வனே!' என்று சிலர் பாராட்டினர். "கலைஞானக் கடலில் தோன்றிய அமுதம் போன்றவனே!" என்று புகழ்ந்தனர் சில்ர். அடியார்களாகிய காங்கள் காண இங்கிலவுலகிலேயே தேவர்களின் தலைவனுகிய சிவபெருமானுடைய திருவருளே யும் ஏழிசை போன்ற மொழியையுடைய எம்பிராட்டியின் ப்ேரரருளேயும் பெற்ருய்" என்று வழுத்தினர் சிலர். 'காழியர் தவிமே, கவுணியர் தினமே, கலைஞானத் தாழிய கடல்ே, அத்ணிடை அமுதே, அடியார்முன் விாழிய வந்திம் மண்மிசை வானேர் தனிநாதன் ஏழிசை மொழியாள் தம்திரு வருள் ப்ெற் றண்ணன்ார்.' இவ்வாறு பலரும் பாராட்டி வழிபடச் சம்பந்தப் பிள்ளையார் தம்முடைய இல்லத்துக்கு எழுந்தருளினர். மறுநாள் காலேயில் திருக்கோயிலுக்கு வந்து பதிகம் பாடி வழிபட்டார். பின்பு அருகில் உள்ள திருக்கோலக்கா என்ற தலத்துக்குச் சென்று, கையில்ை தாளம் போட்டுக் கொண்டே, மடையில் வாளே பாய' என்ற பதிகத்தைப் பாடலானர். அப்பொழுது அப்பிரான் கைசிவக்கத் தாளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/28&oldid=783974" இலிருந்து மீள்விக்கப்பட்டது