பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண நமதே 33 போடுவதைக் கண்டு சிவபெருமானுக்குப் பொறுக்கவில்லை போலும் உடனே பஞ்சாட்சரம் எழுதிய இரண்டு பொன் தாளங்களைச் சம்பந்தப் பெருமானுடைய திருக்கரத்தில் இருக்கும்படி இறைவன் திருவருள் பாலித்தான். அவற் றைத் தலையில் வைத்து வணங்கி, அவற்ருலே தாளம் போட்டுப் பாடத் தொடங்கினர் சம்பந்தர். கையிலே அத் தலத்து இறைவன் தாளங்களே அருள, அந்தத் தாளத்திற்கு நல்ல ஓசை உண்டாகும்படி அங்கே எழுந்தருளிய அம்பிகை அருள் செய்தாள் என்று ஒரு வரலாறு வழங்குகிறது. இப்போது திருக்கோலக்காவைத் தாளமுடையார் கோயில் என்றும், அங்கே கோயில் கொண்டுள்ள இறைவனைச் சப்த புரீசர் என்றும், அம்பி கையை ஓசை கொடுத்த நாயகி என்றும் வழங்கு கின்றனர். திருஞான சம்பந்தர் மீட்டும் சீகாழிக்கு வந்து பலரும் போற்ற இருந்தார். அருகிலுள்ள ஊர்களிலிருந்து அந்தணர்களும் சிவனடியார்களும் வந்து வந்து தங்கள் தங்கள் ஊருக்கு வந்து சிவதரிசனம் செய்துகொண்டு போகவேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண் டார்கள். - சம்பந்தருடைய தாய் பிறந்த ஊர் திருகனிபள்ளி. அவ்வூரினர் வருந்தி அழைக்க, அங்கே செல்லப் புறப் பட்டார் ஞானசம்பந்தர். சிறு குழந்தையாதலினல் கடந்து செல்ல இயலாதென்று அவருடைய தந்தையார் தம்முடைய தோளில் அவரை எடுத்துக்கொண்டு கடந்தார். இதைச் சேக்கிழார் ஓர் அழகிய பாடலால் தெரிவிக்கிருர்: "தாதவிழ்செந் தாமரையின் அகவிதழ்போல் சீறடிகள் தரையின் மீது போதுவதும், பிறர்ஒருவர் பொறுப்பதுவும் பொருஅன்பு புரிந்த சிந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/29&oldid=783975" இலிருந்து மீள்விக்கப்பட்டது