பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருஞான சம்பந்தர் மாதவஞ்செய் தாதையார் வந்தெடுத்துத் தோளின்மிசை வைத்துக் கொள்ள நாதர்கழல் தம்முடிமேல் கொண்டகருத் துட்ன்மோந்தார், ஞானம் உண்டார்.' சம்பந்தப் பெருமானுடைய சிறிய திருவடிகள் தாது அவிழும் செந்தாமரையின் உள்ளிதழ் போலச் சிவப்பாகவும் மென்மையாகவும் இருந்தன. அவை தரையில் நடந்தால் கன்றி வருந்தும், அப்படிச் செய்வதை அவர் தங்தையார் உள்ளம் பொறுக்கவில்லை. வேறு யாரையாவது எடுத்துக் கொண்டுவரச் செய்யலாம். அதற்கு ஆயிரம் பேர் காத்து சின்ருர்கள். அதற்கும் அவர் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. தாமே அந்த இன்பத்தைப் பெற வேண்டும் என்ற ஆசை அவருக்கு. - தவம் செய்து பெற்ற பிள்ளையால் பெறும் இன்பத்தை கழுவவிட மனம் வருமா? மாதவம் செய் தாதையார்’ அல்லவா? அவர் வந்து எடுத்துத் தம்முடைய தோளின் மேல் வைத்துக்கொண்டார். பெருங்கூட்டம் குழ்ந்து கின்றது. தம்முடைய தங்தையாருடைய தோளில் அமர்ந்த இளங்குழந்தைப் பிரான் சாமானியக் குழந்தையாக இருந்தால் சுற்றிச் சுற்றிப் பார்க்கும்; தந்தையார் தோளில் ஏறிய பெருமை யால் துள்ளிக் குதிக்கும். சம்பந்தரோ ஞானம் உண்டவர். அவர் என்றும் தங்தையாராக உள்ள சிவபெருமானுடைய திருவடிகளைத் தம் திருமுடிமேல் வைத்துக் கொண்டதாக உள்ளத்தினல் பாவித்து அங்கே அமர்ந்திருந்தார். கீழே பெற்ற தந்தையாரும், முடிமேலே இறைவனுமாக அந்த ஞானக் கன்று எழுந்தருளியதாம். அவர்கள் போய்க்கொண் டிருந்தபோது எதிரே சோலையினிடையே திருகனிபள்ளி தோன்றியது. அதைக் கண்டு, "இது எந்த ஊர்?' என்று சம்பந்தர் கேட்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/30&oldid=783977" இலிருந்து மீள்விக்கப்பட்டது