பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணே நமதே 35 தக்தையார், 'இதுதான் திருகனி பள்ளி" என்று சொன்னர். அங்கிருந்தபடியே இறைவனைத் தொழுது ஒரு திருப்பதிகம் பாடத் தொடங்கினர் சம்பந்தர். 'காரைகள் கூகைமுல்லை" என்று தொடங்கும் அந்தப் பதிகத்தைப் பாடிக் கடைசியிலுள்ள பாட்டாகிய திருக் கடைக் காப்பில், "திருகனி பள்ளியைத் தியானித்தால் பாவங்கள் கெடும்" என்று பயனைக் கூறினர். அதோடு, *கமதானே' என்று மிடுக்கோடு பாடினர். இறைவன் திருவருளேப் பெற்ற பலத்தால், இவ்வாறு பாடும் மிடுக்கை அப் பெருமான் பெற்ருர். - இப் பதிகத்தைத் தம்முடைய தங்தையாருடைய தோளின்மேல் இருந்தபடியே பாடினர். அந்தக் குறிப்பை, "அத்தர் பியல்மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல்" என்று புலப்படுத்தினர். தம்மை, "ஞான முனிவன்' என்று அதில் சொல்லியிருக்கிரு.ர். அந்தத் திருப்பாட்டு வருமாறு: கடல்வரை ஒதம்மல்கு கழிகானல் பானல்கமழ் காழி என்று கருதப் படுபொருள் ஆறும் நாலும்உள தாக வைத்தபதி யான ஞான முனிவன் இடுப்றை யொன்ற அத்தர் பியல் மேலிருந்தின் இசை யாலுரைத்த பனுவல் நடுவிருள் ஆடும் எந்தை தனி பள்ளி உள்கவினை கெடுதல் ஆண நமதே. "கடலில் மலேபோல் அலைகள் மல்குவதும் கழியிலும் கடற்கரைச் சோலேயிலும் செங்குமுத மலர் கமழ்வதுமாகிய சீகாழி என்று சிறப்பாகக் கருதப் பெறுவதாகிய, ஆறு சாத்திரங்களும் நாலு வேதங்களும் தன்னிடத்திலுள்ள பெருஞ் செல்வமாக வைத்துப் போற்றும் ஊரே தன்னுடைய ஊராகக் கொண்ட ஞானமுனிவகிைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/31&oldid=783978" இலிருந்து மீள்விக்கப்பட்டது