பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 திருஞான சம்பந்தர் சம்பந்தன், ஒலிக்கின்ற முரசொலி கேட்க, தன் தந்தையார் பிடரின்மேல் அமர்ந்து இனிய இசையில்ை பாடிய பாடலைச் சொல்லி, கள்ளிருளில் கடனமாடும் எம் தங்தை யாகிய சிவபெருமானுக்குரிய கனிபள்ளியைத் தியானிக்க, பாவம் கெடும்; அப்படிக் கெடுதல் 5ம் ஆணை’ என்பது இதன் பொருள். திருநனிபள்ளித் திருக்கோயில் சென்று வணங்கி அப்படியே பல தலங்களுக்குச் சென்று வழிபட்டுத் திருப் பதிகம் பாடி, மீட்டும் சீகாழியை வந்து அடைந்தார் சம்பந்தர். தில்லைக் காட்சி சீகாழியிலிருந்து அடிக்கடி அருகிலுள்ள தலங் களுக்குச் சென்று வழிபட்டுத் திருப்பதிகம் பாடினர் ஞானசம்பந்தப் பிள்ளையார். ஒரு நாள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் தம்முடைய மனைவியாராகிய மதங்க சூளாமணியாருடன் அவரைத் தரிசிக்கும் பொருட்டு வந்தார். பழங்கால முதல் இங்காட்டில் இசைக்கலையை வளர்த்து வரும் பாணர் மரபில் தோன்றிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் சிறந்த சிவபக்தர். இராசேந்திரப்பட்டினம் என்று இக்காலத்தில் வழங்கும் திருஎருக்கத்தம்புலியூரில் தோன்றினவர். சிவத்தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு அவன் புகழை யாழில் வாசிக்கும். வழக்கம் உடையவராக இருந்தார். அவ்வாறு தலதரிசனம் செய்து கொண்டு வரும்போது சீகாழியில் திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டு தேவாரத் திருப்பதிகங்களை வெள்ளம் போலப் பொழிந்து வருவதைக் கேள்வியுற்ருர். உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/32&oldid=783979" இலிருந்து மீள்விக்கப்பட்டது