பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்லைக் காட்சி 2r தம்முடைய மனைவியாருடன் சிகாழி சென்ருர். அவர் வருவதை அறிந்த சம்பந்தர். அவரை எதிர்கொண்டு சென்று வரவேற்க, பாணர் ஞானசம்பந்தர் அடிவிழுந்து பணிந்தார். சம்பந்தர், "நீங்கள் இங்கே வந்ததனல் நாம் உளம் மிக மகிழ்ந்தோம்” என்று இன்னுரை கூறி, அவரை அழைத்துக்கொண்டு திருக்கோயிலுக்குச் சென்ருர். திருக்கோயிலின் புற முற்றத்தில் இருக்து இறைவனே வழிபடச் செய்து, 'உங்கள் யாழிசைத் தொண்டைப் புரியுங்கள்' என்று கூறினர். ஞானசம்பக்தர் பணித்த படி பானர் யாழிற் சுருதி கூட்டித் தம் மனேவியாருடன் பாடி வாசித்தார். அவருடைய பாட்டில் யாவரும் ஒன்றித் தம்மை மறந்து கின்றனர். பின்பு யாழ்ப்பாணரை அழைத்து ஊருக்குள் வந்து அவருக்குத் தனியே ஓரிடம் அமைத்து அங்கே தங்கும்படி, செய்தார் சம்பந்தர். பாணர் சம்பந்தப் பெருமானுடைய தேவாரங்களைக் கேட்டு அமுதத்தை நுகர்ந்தவரைப் போல இன்புற்ருர், அவற்றைத் தம் யாழில் இசைத்துப் பாடினர். பாலும் தேனும் கலந்ததுபோல யாழிசையில் ஒன்றிய அப்பாடல்கள் கேட்டோரைப் பிணித்தன்; உள்ளத்தை உருக்கின. - யாழ்ப்பாணர் தம்முடைய வாழ்க்கைப் பயனேயே பெற்றவர் போல மனநிறைவு பெற்ருர். சம்பந்தரை வணங்கி, "அடியேன் எப்பொழுதும் தேவரீருடன் இருந்து தேவரீர் அருளிச் செய்யும் திருப்பாடல்களே யாழில் அமைத்து வாசிக்கும் பேற்றைப் பெறும்படி அருள வேண்டும்” என்று வேண்டினர். சம்பந்தரும் அதற்கு இசைந்தார். அதுமுதல் திருநீலகண்ட யாழ்ப் பாணர் அவருடன் இணைபிரியாமல் இருந்து அவருடைய திருப்பதிகங்களே யாழிலே வாசிக்கும் புண்ணியச் செயலைப் புரிந்து வரலாஞர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/33&oldid=783980" இலிருந்து மீள்விக்கப்பட்டது