பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருஞான சம்பந்தர் சம்பந்தப் பெருமானுக்குத் தில்லைக்குச் சென்று நடராசப் பெருமான வணங்கவேண்டும் என்ற ஆர்வம் தோன்றி வளர்ந்து வந்தது. அதனை அவர் தம் தங்தை யாரிடம் கூற, அவர் இசைந்தார். உடனே சம்பந்தர் தம் தங்தையாரோடும் யாழ்ப்பாணரோடும் தில்லேயை நோக்கிப் புறப்பட்டார். இடையிலே உள்ள தலங்களைத் தரிசித்துக்கொண்டு சென்று கொள்ளிடத்தைக் கடந்தார். தில்லையை நெருங்கித் தென் திசைவாயில் வழியே அத் திருப்பதியை அடைந்தார். சம்பந்தப் பெருமான் எழுந்தருளுவதை அறிந்த தில்லைவாழ் அந்தணர்கள் பலவகை மங்கலப் பொருள்களோடு வந்து வரவேற்ருர்கள். வேதகாதமும் மங்கல முழக்கமும் விசும்பிடை கிறைந்தன. கிறைகுடங்களும் தீபங்களும் திசை எல்லாம் நிரம்பின. சோபனம் சொல்லி மறையவர்கள் ஞானப்பால் உண்ட பிரான வரவேற்று அழைத்துச் சென்ருர்கள். தில்லைத் திருவீதிகளின் வழியே சென்ற சம்பந்தர் எழுலேக் கோபுரத்தைக் கண்டு பணிந்து எழுந்தார். கோபுர வாயிலின் வழியே புகுந்து ஆலயத்தை வலம் வந்து, இறைவன் ஞான ஆனந்த கடம் பயிலும் பொன்னம் பலத்தின் முன்னே வந்தார். கண் களிகொள்ள, சிங்தை யார்வம் முந்த, திருவணுக்கன் திருவாயிலே அடைந்து கின் ருர். சிவபெருமான் தமக்கு வழங்கிய ஞானமே அம்பலமாகவும் உள்ளே அந்த ஞானத்தால் விளங்த ஆனந்தமே திருக்கூத்தாகவும் அமைந்த காட்சியைக் கண்டு கும்பிட்டார்; விழுந்து பணிந்தார். "உணர்வினுக்கும் அப்பாற்பட்ட சிவபோகத்தை உருவையுடைய உடம்பி லுள்ள ஐம்பொறிகளாலும் எளிதாக நுகரும்படி செய் தருளினையே! சின் பெருங்கருனே இருந்தவாறு என்னே!" என்று உருகினர். உள்ள மகிழ்ச்சியின் கிறைவிலே அருமையான இசையோடு திருப்பதிகம் பாடினர்; ஆனந்தம் மேற்கொள விம்மி விம்மிக் கண்ணிர் பொழிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/34&oldid=783981" இலிருந்து மீள்விக்கப்பட்டது