பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவிகைப்பேறும் உபநயனமும் 39. ஆடினர். அவர் திருவாக்கிலே எழுந்த பதிகத்தில் தில்லை வாழ் அந்தணருடைய சிறப்பு முன்னே கிற்கிறது. கற்ருங் கெரிஓம்பிக் கலியை விசரசமே செற்ருர் வாழ்தில்இலச் சிற்றம் பலம்மேய முற்ரு வெண்டிங்கன் முதல்வன் திருப்பாதமே மற்ரு தின்ருரைப் பற்ரு பாவமே! என்று தொடங்குவது அத் திருப்பதிகம். தில்லேவாழ் அந்தணர்கள் வேத வேள்வியை ஒம்பி, இறைவனே வழிபட்டு வாழ்கிறவர்கள். அவர்கள் வேதம் ஒதி எரியோம்புதலால் கலியினல் வரும் தீங்கு அவர் களுக்கும் பிறருக்கும் வாராமல் நன்மையே உண்டாயிற்று. கலியை வாராமல் செற்ருராகிய மூவாயிரவர் வாழும் தில்லையில் சிற்றம்பலத்தில் எம்பெருமான் ஆனந்தத் தாண்டவம் புரிகின்ருன். இளந்திங்களைச் சூடிய அப் பெருமானுடைய திருப்பாதத்தையே பற்ருகப் பற்றி கின்றவர்களைப் பாவங்கள் பற்றுவதில்லை. கெருப்பிலே செல்லரிக்காதது போல இறைவன் திருவடிப் பற்றுடை யார்பால் பாவம் பற்ருது. இவ்வாறு பாடிய அப்பதிகத்தை கிறைவேற்றிக் கோயிலினின்றும் புறம் போக்தார். தில்லேயிலே தங்கி யிருக்க விரும்பாமல் அருகில் உள்ள திருவேட்களம் சென்று தங்கி, அங்கிருந்து வந்து வந்து சிற்றம்பல தரிசனம் செய்து கொண்டார். "ஆடிய்ை கறு கெய்யொடு" என்று பின்னும் ஒரு திருப்பதிகம் பாடினர். சிவிகைப்பேறும் உபநயனமும் தில்லையில் நடராசப் பெருமானச் சேவித்து இன்புற்ற சம்பந்தப் பெருமான் அங்கிருந்து புறப்பட்டு வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/35&oldid=783982" இலிருந்து மீள்விக்கப்பட்டது