பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருஞான சம்பந்தர் தலங்களைத் தரிசிக்க எண்ணினர். அப்போது திருலே கண்ட யாழ்ப்பாண காயனர் அவரை வணங்கி, ‘அடிய்ேனுடைய ஊராகிய திருஎருக்கத்தம்புலியூருக்கும் வெள்ளாற்றங்கரையிலுள்ள பிற பதிகளுக்கும் எழுங் தருள வேண்டும்” என்று விண்ணப்பித்துக்கொள்ள, அவர் வேண்டுகோளுக்கு இணங்கி அத்தலங்களைத் தரிசிக்கப் புறப்பட்டார். திருஎருக்கத்தம்புலியூர் சென்று இறைவனேத் தரிசித்து, 'ஐயர் நீர் அவதரிக்க இப்பதி அளவில்லாத மாதவம் முன்பு செய்தது போலும்' என்று யாழ்ப்பாணரிடம் அன்புடன் கூறி, அங்கிருந்து விருத்தா சலம் முதலிய தலங்களுக்குச் சென்று இறைவனே வழி பட்டுத் திருப்பதிகம் பாடினர். இவ்வாறு தலயாத்திரை செய்யும்போது ஆளுடைய பிள்ளையார் சில காலம் தங்தையார் தோளில் ஏறிச் செல்வார்; சில காலம் தாமே நடந்து செல்வார். திருநெல்வாயில் அரத்துறையைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை மீதுார கடந்தே செல்லலானர். அவருடைய தங்தையார் குழந்தையின் பாத தாமரை கொந்தது கண்டு வருந்தினர். ஆயினும் அப்பெருமான் கடந்தே சென்ருர். போகும் வழியில் மாறன்பாடி என்னும் இடத்தில் இளேப்பாறத் தங்கினர். அப்போது கதிரவன் மலைவாயில் மறைந்தான். இரவு வந்தது. யாவரும் அங்கேயே துயில் கொண்டனர். அப்போது திருநெல்வாயில் அரத்துறை மேவிய சிவபெருமான் ஞானப்பால் உண்ட பிள்ளையார் வழிநடக்கும் வருத்தத்தைக் கண்டு திருவுள்ளம் பொருத வராயினர். அந்த வருத்தத்தை நீக்கும்பொருட்டுப் பிள்ளையார் ஏறுவதற்கு முத்துச் சிவிகையும், அவருக்குப் பிடிக்கக் குடையும், திருச்சின்னங்களும் வழங்கத் திருவுள்ளம் கொண்டார். அவற்றைத் திருக்கோயிலில் வைத்து, திருநெல்வாயிலில் உள்ள மறையவர்கள் கனவில் தோன்றி, "ஞானசம்பந்தன் கம்மைத் தரிசிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/36&oldid=783983" இலிருந்து மீள்விக்கப்பட்டது