பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவிகைப்பேறும் உபநயனமும் 31 வருகின்ருன். அவனுக்காகச் சிவிகையும் குடையும் திருச்சின்னங்களும் வைத்திருக்கிருேம். அவற்றைக் கொண்டு அவனே எதிர்கொண்டு சென்று கொடுத்து அழைத்து வாருங்கள்' என்று அருளினர். அப்படியே சம்பந்தப் பெருமான் கனவினிலும் தோன்றி, "சிவிகை முதலியவை வரும். நீ அவற்றைப் பயன்படுத்திக் கொள் வாயாக!' என்று வாய்மலர்ந்தார். கனவு கண்ட மறையவர் யாவரும் எழுந்து ஒருவருக் கொருவர் தாம் கண்ட கனவைக் கூறி வியந்தனர். யாவரும் திருக்கோயிலுக்குச் சென்று பார்க்கும்போது அங்கே முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் திருச்சின்னங்களும் இருந்தன. அவற்றைக் கண்டு இறைவன் திருவருளே எண்ணி உருகிய அவர்கள் அவற்றை எடுத்துக்கொண்டு ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைக்கப் புறப்பட்டு விட்டார்கள். கனவு கண்ட சம்பந்தரோ எழுந்து தாம் கண்ட கனவைத் தங்தையாருக்கும் பிறருக்கும் கூறினர். உதயமானவுடன் யாவரும் எழுந்திருந்தனர். அப்போது மறையவர்கள் சிவிகை முதலியவற்றுடன் வந்து, ஞான சம்பந்தரைத் தொழுது நிகழ்ந்தவற்றை யெல்லாம் உரைத் தனர். உடனே சம்பந்தப் பெருமான், "எங்தை ஈசன்' என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி, இறைவன் திருவருளே வியந்து பாராட்டினர். பின்னர், திருவைக் தெழுத்தை ஓதி அந்தச் சிவிகையின் மீது ஏறினர். உடன் இருந்தவர் யாவரும் இறைவன் திருவருளே எண்ணி எண்ணி வியந்தனர். முத்துக்குடை கிழற்ற, திருச் சின்னம் ஊத, பிற இசைக்கருவிகள் முழங்க, மக்கள் ஆரவாரம் செய்ய, சம்பந்தர் அந்தச் சிவிகையில் கெல்வாயில் அரத்துறையை நோக்கிப் புறப்பட்டார். அப்பதி சென்று இறைவனே வணங்கிப் பதிகம் பாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/37&oldid=783984" இலிருந்து மீள்விக்கப்பட்டது