பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德3 திருஞான சம்பந்தர் அங்கே சில நாட்கள் தங்கியிருந்தார். அருகில் உள்ள தலங்களே அவ்வப்போது தரிசித்து வந்தார். பின்பு சீகாழிக்குச் செல்லும் விருப்புடையவராகி அங்கிருந்து புறப்பட்டார், சம்பந்தர். வழியிலுள்ள ஊர்களில் வாழும் மக்கள் அவரை வரவேற்று உபசரித்துத் துதித்து வணங்கினர்கள். பழுவூர், விசயமங்கை, திருப் புறம்பயம், சேய்ஞலூர், திருப்பனக்தாள், திருப்பந்தணை கல்லூர், ஓமாம்புலியூர், திருவாழ்கொளிபுத்துார், கடம்பூர், திருகாரையூர், திருக்கருப்பறியலூர் முதலிய பல தலங் களைத் தரிசித்துக்கொண்டு சீகாழியை அணுகினர். சம்பந்தர் எழுந்தருளுகிருர் என்பதைக் கேட்டு அங்ககரத்தில் உள்ள மறையவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி ஓங்க, மறையொலியை வீதிதோறும் முழங்கினர். எங்கும் மகர தோரணங்களும் வாழையும் கட்டினர். சிறைகுடம், துரபம், தீபம் வைத்தனர். கொடிகளைக் கட்டினர். பூரணகும்பங்களே ஏந்தி ஞானசம்பந்தரை வரவேற்றனர், மிகச் சிறப்பாக யாவரும் வரவேற்க, அப்பெருமான் சீகாழிக்குள் வந்து திருநீலகண்ட யாழ்ப்பாணரை அவருடைய திருமனேக்குச் செல்ல விடை கொடுத்துத் தாம் தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளினர். பின்பு கோழித் திருக்கோயில் சென்று இறைவனைத் தரிசித்துப் பல பதிகங்களைப் பாடினர். அப்பொழுது உபநயனம் செய்யும் பருவம் வந்து எய்தவே, மறையவர்கள் கூடிச் செய்யவேண்டிய வற்றைச் செய்ய, ஞானசம்பந்தர் தம் திருமார்பில் முந்நூல் தாங்கலானர். மந்திரங்களே மொழிந்த அந்தணர்கள் முன் அப்பெருமான் வேதமந்திரங்கள் பலவற்றையும் சொல்வி அவர்களே வியப்பில் மூழ்கச் செய்தார். மறையவர் களுக்கு மந்திரங்களிலும் சடங்குகளிலும் இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/38&oldid=783985" இலிருந்து மீள்விக்கப்பட்டது