பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதச் செயல்கள் 33 ஐயங்களை நீக்கி யருளினர். அப்பால் எல்லா மந்திரங் களிலும் சிறந்தது பஞ்சாட்சரம் என்று கூறி, அதன் பெருமையை ஒரு பதிகம் பாடி விளக்கினர். அவற்றையெல்லாம் கேட்ட அந்தணர் பிள்ளேப பெருமானே வணங்கி, பெருத பேறு பெற்ருேம் என்று உள்ளம் கனிந்தனர். அற்புதச் செயல்கள் திருஞான சம்பந்தருடைய பெரும்புகழ் எங்கும் பரவி யது. அதனைத் திருநாவுக்கரசர் கேட்டு, அப்பெருமானேக் கண்டு பணிய வேண்டும் என்ற ஆர்வத்தோடு சீகாழிக்கு வந்தார். அவருடைய வரவை அறிந்த சம்பந்தர், அன்பர் களுடன் சென்று வரவேற்ருர் இருவரும் ஒருவரை ஒருவர் தொழுது கொண்டனர். சீகாழிப்பிள்ளையார் காவுக்கரசரை நேரே திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்ருர். இருவரும் இறைவனே வழிபட்டபின், சம்பந்தப் பிள்ளையார் திரு மாளிகையை அடைந்தனர். அங்கே காவுக்கரசருக்கு அறுசுவை யுண்டி அருத்தி அளவளாவினர் சம்பந்தர். சில நாட்கள் அங்கே தங்கிய காவுக்கரசர், சிவபிரான் எழுங் தருளியிருக்கும் திருக்கோயில்களேத் தரிசிக்க வேண்டும் என்று கூறி விடைபெற்றுச் சென்ருர். ஞானசம்பந்தர், சீகாழியில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமான்மேல் பல வகையான சித்திர கவிகளையும் செந்தமிழ் மாலேகளையும் பாடினர். அப்பால் தலயாத்திரை செய்யத் தொடங்கிப் பல தலங்களுக்குச் சென்று இறை வனே வழிபட்டுத் திருப்பதிகங்கள் பாடினர். அவருடன் அவருடைய தந்தையாரும், திருலேகண்ட யாழ்ப்பான காயனரும், பாணருடைய மனேவியாராகிய மதங்க சூளா மணி யாரும் சென்றனர். போன இடங்களிலெல்லாம் மக்கள் தி. ஞா. ச-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/39&oldid=783986" இலிருந்து மீள்விக்கப்பட்டது