பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருஞான சம்பந்தர் திரண்டெழுந்து வரவேற்றுப் பணிந்தனர்; சம்பந்தருடைய திருப்பதிகங்களைக் கேட்டு உருகினர். சோழ நாட்டில் காவிரிக் கரையில் உள்ள தலங்களைத் தரிசித்துவந்த போது, வட கரையில் உள்ள திருப்பாச்சி லாச்சிராமத்தை அடைந்தார். அக் காலத்தில் மழநாட்டுப் பகுதிக்குத் தலைவனுகக் கொல்லி மழவன் என்பவன் ஆண்டுவந்தான். அவனுடைய மகளுக்கு வலிப்பு நோய் வந்து மிகவும் துன்புற்ருள். அதனே முயலக வியாதி என்றும் சொல்வார்கள். மணி மந்திர மருத்துவத்தினுல் பலவகையில் பரிகாரம் செய்தும் அந்த நோய் திரவில்லை. அதனுல் மனம் வருந்திய கொல்லி மழவன், 'இனி இறைவனேயன்றி வேறு புகல் இல்லை" என்று எண்ணித் தன் பெண்ணைத் திருப்பாச்சிலாச்சிராமத் திருக்கோயி லுக்கு எடுத்து வந்து, இறைவன் சங்கிதியில் இட்டு வைத்திருந்தான். ஞானசம்பந்தப் பிள்ளையார் அந்தத் தலத்துக்கு வந்ததை உணர்ந்த கொல்லி மழவன் அவரை எதிர் கொள்ளச் சென்று, அவர் முத்துப் பக்தரினின்றும் இறங் கும்போது அவர் காவில் வீழ்ந்து எழுந்து கண்ணிர் வார கின்று ஏத்தினன். எங்கும் அலங்காரம் செய்யச் சொல்லி முன் ஏற்பாடு செய்திருந்த அவன் திருவீதி வழியே சம்பந்தரை அழைத்துக்கொண்டு கோயிலே அடைந்தான். திருக்கோயிலே வலம் வந்து சங்கிதியிற் புகும்பொழுது அங்கே கிடந்த பெண்ணைக் கண்டார் சம்பந்தர். 'ஏன், இப்படிக் கிடக்கிருள்?' என்று அவர் கேட்க, மழவன் சிகழ்ந்ததை உரைத்தான்.உடனே மனம் இரங்கிய பிள்ளைப் பெருமான் இறைவன் திருவருளே வழுத்தி, துணிவளர் திங்கள்” என்ற திருப்பதிகத்தைப் பாடியருளினர். அதில், "பாச்சிலாச்சிராமத் துறைகின்ற, மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/40&oldid=783988" இலிருந்து மீள்விக்கப்பட்டது