பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதச் செயல்கள் 35 அந்தப் பெண்ணின் ரீலேக்கு இரங்கிப் பாடினர். திருப் பதிகம் பாடி முடித்தவுடன், அந்தப் பெண் நோய் நீங்கி, காணத்துடன் எழுந்துவந்து தன் தங்தையினருகில் கின்ருள். கொல்லி மழவன் மகிழ்ச்சி பொங்கத் தன் மகளுடன் தானும் சம்பந்தர் தாளில் வீழ்ந்தான். இறைவன் திருவருட் சிறப்பை கினைந்த அப்பெருமான் ரேணி வேணி விமலர் பாதம் ஒன்றிய சிங்தையுடன் பணிந்தார். அப்பால் கோயிலுள்ளே சென்று திருப்பாச்சிலாச் சிராமப் பெருமானே வணங்கிவிட்டுப் பிற தலங்களையும் வழிபடப் புறப்பட்டார். அந்தப் பக்கத்தில் உள்ள திருக் கோயில்களே வணங்கிப் பதிகம் பாடிப் பின் கொங்கு நாட்டை அடைந்தார். இறைவன் மாதிருக்கும் பாதியளுக எழுந்தருளியிருக்கும் திருச்செங்கோட்டை அடைந்து வணங்கினர். அதற்குக் கொடிமாடச்செங்குன்றுார் என்றும் ஒரு பெயர் உண்டு. அங்கிருந்து பவானியாகிய திருகளு வுக்குச் சென்று வழிபட்டுப் பதிகம் பாடி, மீண்டும் திருச்செங்கோட்டை அடைந்தார். அப்போது பனிக் காலம் வந்தது. வண்டுகள் மலரை மொய்த்தலே வெறுத்தன. தாமரைகள் கருகின. மரகதச் சிறு கொடியில் பளிங்குமணியைக் கோத்தாற்போல அறுகம்புல்லின் நுனியில் பனித்துளிகள் நின்றன. மலை களின்மேல் பணிப் போர்வை வெள்ளே நிறத்தோடு படர்ந் தது. குளிருக்கு வருந்தி வெண்போர்வையைக் குன்றுகள் போர்த்துக் கொண்டது போல இருந்தது அந்தக் காட்சி. "அளிக்குலங்கள் சுளிந்திகல அரவிந்தம் முகம்புலரப் பளிக்குமணி மரகதவல் லியிற்கோத்த பான்மையெனத் துளித்தலேமெல் அறுகுபனி தொடுத்தசையச் சூழ்பணியால் குளிர்க்குடைந்து வெண்படாம் போர்த்தனேய குன்று களும்.' (அளிக்குலங்கள் - வண்டுக்கூட்டங்கள். சுளிந்து - வெறுத்து. புலர-வாட, மரகதவல்லி-மரகதக்கொடி, படாம்-போர்வை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/41&oldid=783990" இலிருந்து மீள்விக்கப்பட்டது