பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருஞான சம்பந்தர் வரவரப் பனி மிகுதியாயிற்று. எங்கும் குளிர் சுரம் பரவியது. சம்பந்தரோடு வந்திருந்த அடியார்களில் சிலரும் அந்தச் சுரத்தில்ை இன்னலுற்றனர். அதல்ை வருக்திய அவர்கள் தங்கள் கிலேயைப் பிள்ளையாரிடம் விண்ணப்பித் துக் கொண்டார்கள். 'இந்த நோய் இந்த இடத்துக்கு இயல்பானலும் சிவனடியாராகிய நம்மை வருத்தாது” என்று கூறி, "அவ்வினைக் கிவ்வினை' என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினர் சம்பந்தர். "கைவினே செய்து எம் பிரான்கழல் போற்றுதும் நாம் அடியோம், செய்வினை வந்தெமைத் திண்டப்பெரு திரு நீலகண்டம்” என்று அப்பாட்டில் அமைத்தார். ஒவ்வொரு பாட்டும் இந்தக் கருத்தோடும் திருநீலகண்டம் என்ற திருகாமத்தோடும் முடிந்து கின்றது. பதிகத்தை நிறைவேற்றினர் சம்பந்தர். அடியவர் களுக்கு வந்த குளிர் சுரம் நீங்கியது; ஊரில் பிறருக்கு வந்திருந்த நோயும் நீங்கியது. அந்த ஊரில் வழக்கமாக வரும் அந்நோய் அதுமுதல் வராமல் ஒழிந்தது. சம்பந்தர் திருச்செங்கோட்டிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருப்பாண்டிக்கொடுமுடி வந்து இறைவனேப் பணிந்து தமிழ்மாலே சாத்தினர். அப்பால் வெஞ்சமாக் கூடல், கருவூர் என்னும் கொங்கு நாட்டுத் தலங்களைத் தரிசித்து இன்புற்ருர்.மீட்டும் கிழக்கே உள்ள சோழ நாட்டுப் பகுதிகளே வழிபடப் புறப்பட்டு, இரத்தினகிரியாகிய வாட்போக்கி, திருப்பராய்த் துறை, திருவாலந்துறை, திருச்செந்துறை, திருக்கற்குடி முதலிய பல தலங்களே அடைந்து போற்றித் திருவானைக்காவலை கண்ணினர். அங்கே இறைவனே வழிபட்டுப் பல பதிகங்கள் பாடினர். ஒரு திருப்பாட்டில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/42&oldid=783992" இலிருந்து மீள்விக்கப்பட்டது