பக்கம்:நாயன்மார் கதை-2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாழில் அடங்கா இசை 3? செங்கட் பெயர்கொண்டவன் செம்பியர்கோன் அங்கட் கருணை பெரிதாயவனே. என்று கோச்செங்கட் சோழன் அருள் பெற்றதைக் குறிப் பித்தார். 3. மேலும் பல திருத்தலங்களே வழிபட்டு அடியார் கூட்டத்தோடும் திருவலஞ்சுழியை அடைந்தார். அப்போது கோடைக்காலம் வந்தது. எங்கும் வெம்மை படர்ந்தது. சம்பந்தர் திருச்சத்திமுற்றம் வந்து பணிந்து அருகில் உள்ள பட்டீச்சுரத்தைத் தரிசிக்கப் புறப்பட்டார். அப்பொழுது இளம் பிள்ளேயாகிய அவர் கீழிறங்கி நடக்கையில் அவர் திருமேனியின்மேல் வெயில் வீசியது. அதல்ை அவர் திருவுடம்பு அலசுமே என்ற கருணையினல் சிவபெருமான் ஒரு பூதத்தை ஏவி முத்துப் பந்தர் எடுத்துச் சென்று கிழல் பரப்பும்படி அருளின்ை. அவ்வாறே அப்பூதம் செய்து, "பட்டீசர் அருளிச் செயல் இது" என்று குரல் காட்டியது. வானத்தில் எழுந்த ஒலியையும், வந்த பந்தரையும் கண்டு மனமுருகிய பிள்ளையார், கீழே விழுந்து பணிந்தார். உடனே அடியவர்கள் அந்தப் பந்தரின் கால்களைப் பற்றிக்கொண்டு பிடிக்கலானர்கள். அந்தப் பந்தரின் கிழலில் ஞானசம்பந்தர் பட்டீச்சுரம் வந்து எம்பெருமானப் போற்றிப் பாடியருளினர். எங்கே சென்ருலும் இறைவன் திருவருளால் அற்புதங்கள் நிகழ்வதையும், பிள்ளையார் தமிழ்மறை பாடுவதையும் யாவரும் உணர்ந்து உருகி உருகிப் பாராட்டினர்கள். யாழில் அடங்கா இசை திருப்பட்டீச்சுரத்தினின்றும் புறப்பட்டுச் சோழ காட்டுத் தலங்கள் பலவற்றையும் தரிசித்துத் திருப்பதிகம் பாடிய சம்பந்தர் திருவாவடுதுறையை அடைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-2.pdf/43&oldid=783994" இலிருந்து மீள்விக்கப்பட்டது